[உபுண்டு பயனர்]நீண்ட கால ஆதரவு வெளீயீடுகளின் அடிப்டையிலான தொடர் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக..

Shrinivasan T tshrinivasan at gmail.com
Thu Jan 16 00:04:15 UTC 2020


அருமை.

நன்றி

On Wed, Jan 15, 2020, 23:13 ம. ஶ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:

> வணக்கம்,
>
> உபுண்டு வின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளின் அடிப்படையிலான தொடர்பயிற்சி
> அளிக்கும் ஒரு முயற்சியில் எமது ஒரு தொழிற் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக
> உபுண்டு தமிழ் குழுமத்தாரோடு வழங்க விழைகிறேன்.
>
> தற்போதைய நீண்ட கால ஆதரவு வெளியீடு 18.04 தனை தொடரந்து 20.04 வரும்
> ஏப்ரலில் வர இருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட இதுவரை உபுண்டு
> அறிமுகமாகாத பயனர்களுக்காக இந்த ஒரு நாள் பயிற்சி மாதந்தோறும் தொடர்ந்து
> நான்காவது சனிக்கிழமைகளில் நடைபெறும். உபுண்டு அறிமுகம் வேண்டி, உபுண்டுவை
> பயன்படுத்த விழைவோருக்கு தொடர்ந்து அதனை அறிமுகப்படுத்துவது மட்டுமே இதன்
> நோக்கம்.
>
> இதில் ஒவ்வொரு மாதமும் அதிகப்பட்சம் இருபது பேர் வரை கலந்து கொண்டு
> அவர்களுக்கு நேரடியான செய்முறை பயிற்சியோடு கூடிய விளக்கம் உபுண்டுவை
> பயன்படுத்துவதில் அளிக்கப்படும். ஒரு நாள் பயிற்சிக்கு ரூ 500/- வரை கலந்து
> கொள்ளும் நபர் பயிற்சி வசதிகள் ஏற்பாடுகளுக்காக செலுத்த வேண்டும் என்பது
> எதிர்பார்ப்பு. ஒரு நிறுவனமே கூட ஒரு மாத நிகழ்வை அதன் உறுப்பினர்களுக்காக
> / அது பரிந்துரைக்கும் பயனர்களுக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.
>
> இந்நிகழ்வில் விளக்கப்படும் விசயங்கள் தொடர்பான ஆவணங்கள், வீடியோ
> டுடோரியல்கள் தனியாக அனைவருக்கும் கிடைக்கும்படி யூடியூப் தளம் வாயிலாகவும்
> விக்கி பக்கங்கள் வாயிலாகவும் தரப்படும். நேரடியாக பயிற்சி பற வேண்டும்
> என்று தேவைப்படுவோர் மட்டும் இந்த ஒரு நாள் தொடர் அறிமுக நிகழ்வை
> பயன்படுத்திக் கொள்ளலாம். இடையே வரும் உபுண்டு வெளியீடுகள் (20.10, 21.04,
> 21.10, 22.04, 22.10, 23.04, 23.10) கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
>
> முன்னரே பதிவு செய்யும் விதமாக குறைந்தது ஐந்து பெயராவது பதிந்தால் மட்டுமே
> அம்மாதத்திற்கான இந்நிகழ்வு நடத்தலாம் என்று யோசனை. நிகழ்வு எங்கள் நிறுவன
> வளாகத்தில் நடைபெறும்.
>
> நான்கு வாரங்களுக்கு முன்னதாக அடுத்த நிகழ்வுக்கான இணைய விண்ணப்ப படிவம்
> திறக்கப்பட்டு நிகழ்வின் மூன்று நாட்கள் முன்னதாக வரை திறக்கப்பட்டு
> இருக்கும். நிகழ்விற்கு முன்னதாக குறைந்தபட்ச நபர்கள் பதியாவிட்டால் அம்மாத
> நிகழ்வு அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும். நிகழ்விற்கு பதிவதற்கான
> விண்ணப்பிப்பதற்கான இணைப்பையும் ஒருங்கிணைப்பவர் தொடர்பு எண் முகவரி ஒரு
> நாள் நிகழ்வில் சொல்லித் தரப்படும் விசயங்ககளின் விவரம் ஆகியவற்றையும்
> அடுத்த இமெயில் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
>
> நன்றி.
>
> --
> ம. ஶ்ரீ ராமதாஸ்
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20200116/ede5d1c2/attachment-0001.html>


More information about the Ubuntu-tam mailing list