[உபுண்டு பயனர்]நீண்ட கால ஆதரவு வெளீயீடுகளின் அடிப்டையிலான தொடர் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக..

ம. ஶ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Wed Jan 15 17:43:00 UTC 2020


வணக்கம்,

உபுண்டு வின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளின் அடிப்படையிலான தொடர்பயிற்சி 
அளிக்கும் ஒரு முயற்சியில் எமது ஒரு தொழிற் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக 
உபுண்டு தமிழ் குழுமத்தாரோடு வழங்க விழைகிறேன்.

தற்போதைய நீண்ட கால ஆதரவு வெளியீடு 18.04 தனை தொடரந்து 20.04 வரும் 
ஏப்ரலில் வர இருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட இதுவரை உபுண்டு 
அறிமுகமாகாத பயனர்களுக்காக இந்த ஒரு நாள் பயிற்சி மாதந்தோறும் தொடர்ந்து 
நான்காவது சனிக்கிழமைகளில் நடைபெறும். உபுண்டு அறிமுகம் வேண்டி, உபுண்டுவை 
பயன்படுத்த விழைவோருக்கு தொடர்ந்து அதனை அறிமுகப்படுத்துவது மட்டுமே இதன் நோக்கம்.

இதில் ஒவ்வொரு மாதமும் அதிகப்பட்சம் இருபது பேர் வரை கலந்து கொண்டு 
அவர்களுக்கு நேரடியான செய்முறை பயிற்சியோடு கூடிய விளக்கம் உபுண்டுவை 
பயன்படுத்துவதில் அளிக்கப்படும். ஒரு நாள் பயிற்சிக்கு ரூ 500/- வரை கலந்து 
கொள்ளும் நபர் பயிற்சி வசதிகள் ஏற்பாடுகளுக்காக செலுத்த வேண்டும் என்பது 
எதிர்பார்ப்பு. ஒரு நிறுவனமே கூட ஒரு மாத நிகழ்வை அதன் உறுப்பினர்களுக்காக 
/ அது பரிந்துரைக்கும் பயனர்களுக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிகழ்வில் விளக்கப்படும் விசயங்கள் தொடர்பான ஆவணங்கள், வீடியோ 
டுடோரியல்கள் தனியாக அனைவருக்கும் கிடைக்கும்படி யூடியூப் தளம் வாயிலாகவும் 
விக்கி பக்கங்கள் வாயிலாகவும் தரப்படும். நேரடியாக பயிற்சி பற வேண்டும் 
என்று தேவைப்படுவோர் மட்டும் இந்த ஒரு நாள் தொடர் அறிமுக நிகழ்வை 
பயன்படுத்திக் கொள்ளலாம். இடையே வரும் உபுண்டு வெளியீடுகள் (20.10, 21.04, 
21.10, 22.04, 22.10, 23.04, 23.10) கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

முன்னரே பதிவு செய்யும் விதமாக குறைந்தது ஐந்து பெயராவது பதிந்தால் மட்டுமே 
அம்மாதத்திற்கான இந்நிகழ்வு நடத்தலாம் என்று யோசனை. நிகழ்வு எங்கள் நிறுவன 
வளாகத்தில் நடைபெறும்.

நான்கு வாரங்களுக்கு முன்னதாக அடுத்த நிகழ்வுக்கான இணைய விண்ணப்ப படிவம் 
திறக்கப்பட்டு நிகழ்வின் மூன்று நாட்கள் முன்னதாக வரை திறக்கப்பட்டு 
இருக்கும். நிகழ்விற்கு முன்னதாக குறைந்தபட்ச நபர்கள் பதியாவிட்டால் அம்மாத 
நிகழ்வு அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும். நிகழ்விற்கு பதிவதற்கான 
விண்ணப்பிப்பதற்கான இணைப்பையும் ஒருங்கிணைப்பவர் தொடர்பு எண் முகவரி ஒரு 
நாள் நிகழ்வில் சொல்லித் தரப்படும் விசயங்ககளின் விவரம் ஆகியவற்றையும் 
அடுத்த இமெயில் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி.

--
ம. ஶ்ரீ ராமதாஸ்




More information about the Ubuntu-tam mailing list