[உபுண்டு பயனர்]லிப்ரெஓபிஸ் 4.3 - வெளியீட்டு நிகழ்வு
அருண் குமார் - Arun Kumar
thangam.arunx at gmail.com
Sat Aug 2 16:43:48 UTC 2014
அன்புடையீர்,
உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 இன் தமிழ்ப்
பதிப்பு இம்மாதம் வெளியீடு காணவுள்ளது. அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்திலும்
மலேசியாவிலும் இரண்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில்
பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகளின் விவரம் பின்வருமாறு:
*மலேசியா*
தேதி : 3 ஆகஸ்ட் 2014
நேரம் : காலை 10:30 மணிக்கு
இடம் : உத்தமம் மலேசியா
பெதாலிங் ஜெயா
ஏற்பாடு : உத்தமம் மலேசியா
தொடர்புக்கு : சி.ம. இளந்தமிழ் (+60 12-314 3910)
*தமிழகம்*
தேதி :<பிறகு அறிவிக்கப்படும்>
நேரம் :<பிறகு அறிவிக்கப்படும்>
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்
சென்னை
ஏற்பாடு : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு(FSFTN)
தொடர்புக்கு : சிபி கனகராஜ் (9840670143)
மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வின்போது லிப்ரெஓபிஸ்பற்றிய ஒரு
குறுகிய நெரப் பயிற்சியும் கொடுக்கப்படும். நிகழ்வில் கலந்துகொள்வோர் தங்கள்
மடிக்கணினிகளையும் திறன்பேசிகளையும் உடன் கொண்டுவரும்படி
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு,
அருண் குமார்
தன்னார்வலர், தமிழா! குழு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20140803/cbfba474/attachment.html>
More information about the Ubuntu-tam
mailing list