[உபுண்டு பயனர்]கணியம் – இதழ் 18

Shrinivasan T tshrinivasan at gmail.com
Sun Jun 30 09:41:40 UTC 2013


www.kaniyam.com/release-18

வணக்கம்.

'கணியம்' இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கணியம் வாசகர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.இலங்கையில் கணியம் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. "கம்ப்யூட்டர் டுடே"
இதழின் அனுராஜ் சிவரஜா அவர்களின் முயற்சியில் மாதமிருமுறை இதழாக
வெளிவருகிறது.கணியம் இதழுக்கு கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய
செய்தியின் மூலம் நன்றிகளை தெரிவிக்கிறேன்.கணியம் இதழுக்கு இன்னும் பல எழுத்தாளர்கள் தேவை. புது எழுத்தாளர்களை
உருவாக்க உங்கள் உதவிகள் தேவை
கணினி நுட்ப கட்டுரைகளை எழுத ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தலாமா?தமிழில் வீடியோ பாடங்கள் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. ஒரு பத்து பேர்
வாரம் ஒரு வீடியோ என தயாரித்தாலும் ஓர் ஆண்டில் லினக்ஸில் உள்ள
பெரும்பான்மையான மென்பொருட்களுக்கு வீடியோ பாடங்கள் தயாரித்து விட
முடியும். ஆர்வம் உள்ளோர் எனக்கு எழுதவும்.

இந்த இதழை கிண்டில், ஐபேட் , டேப்லட் போன்ற மின் புத்தக கருவிகளிலும்
படிக்கும் வகையில் 6" pdf, epub , azw ஆகிய வடிவங்களிலும் அளிக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor at kaniyam.comபொருளடக்கம்  இலங்கையில் கணியம் - அச்சு வடிவில்
  கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் - நிறுவுதல்
  Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு
  எளிய செய்முறையில் C – பாகம் 7
  லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution)
  பைதான் - 11
  FreeBSD - ஒரு அறிமுகம்
  மக்களை லினக்ஸ் நோக்கி கவரும் முனிச் நகர குழு
  K3b - உபுண்டு லினக்ஸில் CD/DVD யில் எழுதும் மென்பொருள்
  உபுண்டுவை நிறுவியபின் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
  விண்ணைத் தாண்டிய லினக்ஸ்
  எளிய GNU/Linux commands
  நீங்களும் பங்களிக்கலாமே
  ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  கணியம் வெளியீட்டு விவரம்
  கணியம் பற்றி

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :   http://www.collab.net/svnedge


More information about the Ubuntu-tam mailing list