[உபுண்டு பயனர்]கணியம் - 14

Shrinivasan T tshrinivasan at gmail.com
Thu Feb 28 03:09:47 UTC 2013


http://www.kaniyam.com/release-14/

வணக்கம்.

'கணியம்' இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்கள் அனைவரின் பேராதரவுடன் "எளிய தமிழில் MySQL" மின்னூல் 1100
பதிவிறக்கங்களை தாண்டியுள்ளது. தற்போது "Ubuntu Software Center" லும்
கிடைக்கிறது. உங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் மேலும் பல நூல்களை
உருவாக்கும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

 தமிழ் சார்ந்த மொழியியல் மென்பொருட்களின் தேவை பெருமளவில் அதிகரித்து
வருகிறது. தனியுரிம வகையில் சில இருந்தாலும் முழுதும் கட்டற்ற வகையில்
பின்வரும் மென்பொருட்கள் தேவை.

  Corpus
  Morphological Analyzer
  Font Converter
  Spell Checker
  Grammar Checker
  Text to Speech Conversion
  Optical Character Recognition

முதல் கட்டமாக corpus ஒன்றை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். Python
மற்றும் Django web framework தெரிந்த அன்பர்கள் இந்த திட்டத்தில்
பங்கேற்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் editor at kaniyam.com க்கு மடல்
அனுப்பலாம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம்,

நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

~o~ திருத்தி எழுதி வெளியிடலாம்.

~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.

ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை
சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ்
காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor at kaniyam.com

இந்த இதழில்

  எல்லோரும் இந்நாட்டு மன்னர் பாகம் -1
  எளிய செய்முறையில் C – பாகம் 3
  பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2
  PHP கற்கலாம் வாங்க - பாகம் 2
  இங்க்ஸ்கேபில் கண்ணாடி தோற்ற குறியுருவம்(Glossy Icon) உருவாக்குதல்
  பைதான் - 7
  இயங்கு தளத்தை நகலெடுக்கலாமா ?
  பழைய பதிவுக் கோப்புகளை நீக்குதல்
  எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(3)
  ஜேம்ஸ் வாட் : விஞ்ஞானியை காட்டிலும் ஒரு தனியுரிமைவாதி !
  ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  கணியம் வெளியீட்டு விவரம்
  கணியம் பற்றி...--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge :   http://www.collab.net/svnedge


More information about the Ubuntu-tam mailing list