[உபுண்டு பயனர்]கணியம் – இதழ் 10

Shrinivasan T tshrinivasan at gmail.com
Fri Oct 12 19:27:20 UTC 2012


http://www.kaniyam.com/release-10/

வணக்கம்.

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா சென்ற மாதம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் மதுரை, புதுவை மற்றும் சென்னையில் சிறந்த முறையில் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த தன்னார்வ தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றிகள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள்
வழங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருட்கள் பற்றி
அறிமுகம் செய்து வைக்க இதுவே தக்க தருணம். எல்லா ஊர்களிலும் மாணவர்களுக்கு
கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்க,அதிக அளவில் தன்னார்வ தொண்டர்கள் தேவை.
 தேவையான பயிற்சிகளையும், உதவிகளையும் தர ஆர்வமுடன் காத்திருக்கிறோம். உங்கள்
பகுதியில் கட்டற்ற மென்பொருள்கள் பற்றிய விளக்க உரைகளுக்கும் பயிற்சிகளுக்கும்
எங்களை அணுகவும். editor at kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

உங்கள் அனைவரின் பேராதரவோடு கணியம், தனது முதல் ஆண்டை நெருங்க உள்ளது. அடுத்த
ஆண்டில் பல்வேறு புதிய முயற்சிகளும் படைப்புகளும் நிகழ உள்ளன. இதற்கு மேலும்
பல உதவிக்கரங்கள் தேவை. தமிழும் கட்டற்ற     மென்பொருளிலும் ஆர்வம் உள்ள
அனைவரது உதவியும் தேவை. வீடியோ பாடங்கள், கேள்வி பதில் தளம், நேரடி பயிற்சி
பட்டறைகள், இணைய வழி பயிற்சிகள், அச்சு ஊடக கட்டுரைகள் என பல பணிகள்
காத்துள்ளன. வாசகர் அனைவரையும்                 பங்களிக்க அழைக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால்,
மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர
வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற
உரிமையில் வெளியிட வேண்டும்.

பொருளடக்கம்

மென்பொருள் விடுதலை நாள் 2012 – நிகழ்ச்சி அறிக்கை
படங்களை ஒப்பிடுதல் – Geeqie
LibreOffice Formula Vs Microsoft Equation Editor
HTML5 – ஒரு பட விளக்கம்
வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03
MySQL பாகம்: இரண்டு
தமிழ்க் கணிமையும் கட்டற்ற மென்பொருளும்
மாணவர் இணைவை இந்திய கல்வி முறை கற்பிக்கிறதா?
Open Source – அப்டினா என்ன?
மார்க் ஷட்டில்வொர்த்துடன்(Mark Shuttleworth) ஒரு நேர்காணல்
பைதான் அடிப்படை கருத்துகள் – 4
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012
எங்கிருந்தும் உங்கள் கணினியை இயக்கலாம்
லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழில் எழுதுவது எப்படி?
லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல்
கணியம் வெளியீட்டு விவரம்
கணியம் பற்றி

நன்றி.

-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20121013/57816211/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list