[உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jul 20 17:11:50 UTC 2012


நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க...

--

ஆமாச்சு

On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote:
> வணக்கம்,
>
> டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற 
> இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு 
> அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.
>
> அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் 
> முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் 
> கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
>
>   * இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
>   * தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
>   * நிரல்:
>       o கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
>       o உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
>       o உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்
>
>   * சிறப்பம்சங்கள்
>       o நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள
>         ஏற்பாடு.
>       o உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- & ரூ 30/-
>         விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
>       o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர்
>         இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.
>
> வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!
>
> ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி 
> கணினிச் சங்க தன்னார்வலர்கள்.
>
> -- 
>
> ஆமாச்சு
>
>
>
> This body part will be downloaded on demand.

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120720/25749b67/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list