[உபுண்டு பயனர்]தமிழ் 12.04 பதிப்பில் இடம்பெறுவது பற்றி

Barneedhar barneedhar at gmail.com
Mon Jan 16 15:57:32 UTC 2012


வணக்கம் தோழர்களே,
நான் இந்த மடலற் குழுவில் புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் நான். நான் இங்கு
உறுப்பினராக சேர உதவியாக இருந்த பத்மநாதன் அவர்களுக்கும், ஆமாச்சு
அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் பெயர் பரணீதர் வீக்னேஷ்வர். என் Launchpad profile -
https://launchpad.net/~jokerdino என் Wiki profile -
http://wiki.ubuntu.com/jokerdino

நான் தற்பொழுது சிங்கப்புரில் வசித்து வருகிறேன். நான் ஒரு கல்லூரி மாணவன்.
நான் தமிழ் மொழிப்பெயர்ப்பு குழுவில் சென்ற ஆண்டு உறுப்பினராக
சேர்க்கப்பட்டவன். அதன் பின்னர், என்னால் முடிந்தவரை, உபுண்டுவை
மொழிப்பெயர்க்க முயற்சிகள் செய்துள்ளேன்.

தற்பொழுது 70% மட்டுமே தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதாக இந்த பக்கம் (
http://people.canonical.com/~dpm/stats/ubuntu-12.04-translation-stats.html)
கூறுகிறது. 12.04-இல் இடம் பெற வேண்டுமானால், 80%-யையாவது தொடவேண்டும்.
மேலும், மொழிப்பெயர்ப்பைச் சோதிக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் நான்
தற்பொழுது 12.04-ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதனால், சோதனைப் பற்றி
நீங்கள் அவ்வளவாக கவலைப் பட வேண்டியதில்லை.

ஒரு சில நபர்களின் உழைப்பால் மட்டும் தமிழ் உபுண்டு 12.04-இல் இடம்பெற வைக்க
முடிகிற அளவிற்கு முயற்சிகள் செய்யமுடியும் என்ற நம்பிக்கை என்னை விட்டு
போய்விட்டது. அதனால், நம் குழு தற்பொழுது இயங்கும் விதத்தில் சிற்பல
மாற்றங்களைக் கொண்டு வந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று
நம்புக்கிறேன்.

என் என்ணங்கள் கீழே:
1. புது உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களுக்கு சில வழிமுறைகளைக் கொண்டு
வரவேண்டும். உதாரணத்திற்கு, மொழிப்பெயர்த்தலால், கர்ம புள்ளிகள் 200-யையாவது
கொண்டிருக்க வேண்டும், போன்றவை.
2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை
http://goo.gl/fdanZதயார் செய்ய முயற்சித்து வருகிறேன்.
3. இணையத்தளத் தொடர் அரட்டை அரங்கத்திலும், உபுண்டு கருத்துக்களத்திலும்
யாரவது எப்பொழுதும் இருக்க வேண்டும். புதியவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.
4. முக்கியமாக, குழுவின் தலைவர் மிகவும் ஈடுப்பாட்டுடன் இருப்பது முக்கியம்
என்று கருதுகிறேன். தற்பொழுது, ஆமாச்சு மிகவும் வேலையாக இருப்பதாக பத்மநாதன்
என்னிடம் தெரிவித்தார். அதனால், ஆமாச்சுவிற்கு விருப்பம் இருந்தால், என்னை
அடுத்த தலைவராக தேர்வுச் செய்யுமாறு வேண்டுக்கோள் விடுக்கிறேன். அதற்கான
விவரங்கள் இங்கே:
https://wiki.ubuntu.com/Translations/KnowledgeBase/RoleReassignmentPolicycy

என்னுடைய கருத்துகளைச் சுயநலமிக்கதாக கருதாமல், அதில் இருக்கும் நன்மைகளை
உணர்ந்து ஒரு நல்லதொரு முடிவை எடுக்குமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
பரணீதர்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120116/eb0aca17/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list