[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்
Barneedhar
jokerdino at ubuntu.com
Sun Apr 29 15:07:37 UTC 2012
மன்னிக்கவும், இணைய கோளாறால் என்னால் சரியான நேரத்தில் நிமிடங்களை
மின்னஞ்சலில் அனுப்ப முடியவில்லை.
*கூட்டத்தைப் பற்றிய தகவல்:*
நேரம்: 28 April 2012 3PM (GMT +5.30)
கூட்டத்தில் பங்குக்கொண்டோர்: amachu, jokerdino, iiname, shrini
*எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புகள்:*
- நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது
- அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது
- உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீடுகளை (LTS) அடிப்படையாகக்கொண்டு நம்
பணிகளை மேற்கொள்வது.
கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள்:
- உபுண்டு 12.04-க்கான பயனர் ஆவணத்தைத் தயாரித்தல் - வீடியோ டுடோரியல்
போன்றவற்றைச் செய்வது
- உருவாக்குநருக்கான (Developer) வழிகாட்டிகளைத் தயாரித்தல்
- தமிழ்ப் பயன்பாடுகளைப் பொதுவாக உருவாக்கி, உபுண்டுவில் கிடைக்கும் படி
செய்வதுப்பற்றி - Tamil font, spell checker and screen reader in Tamil
- உபுண்டு தமிழ்ப் மொழிப்பெயர்ப்பை முடிந்தவரை upstream செய்வது.
உபுண்டுவின் தனிப் பொதிகளை (packages) launchpad-ல் செய்வது
- உபுண்டுவின் தனிப் பொதிகள் அதிக அளவில் உள்ளதால், உபுண்டுவைத் தழுவிய
ஒரு டிஸ்ட்ரோவை வடிவமைத்து, குறிப்பிட்ட பொதிகளை மட்டும்
தீர்மானித்து, அவற்றை
மொழிப்பெயர்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் எழுப்பப்பட்ட பணிகளை உள்ளடங்கிய செயற்திட்டத்தை வரைந்து
குழுமத்தில் பகிர்தல்.
பொறுப்பு: ஆமாச்சு
ubuntu-tam.org-வை மீண்டும் துவக்குதல்.
பொறுப்பு: ஆமாச்சு
அடுத்த கூட்டத்தைப் பற்றிய தகவல்:
நேரம்: 26 May 3PM (GMT +5.30)
இடம்: #ubuntu-tam in irc.freenode.net
பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்:
- மாதாந்திர நினைவூட்டிகளை அனுப்ப புதிய நபர் தேர்வு செயவது
நன்றி,
பரணீதர்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120429/e9653631/attachment.html>
More information about the Ubuntu-tam
mailing list