[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கல்வியும் தகவல் தொழில்நுட்பமும் - கண்காட்சி கருத்தரங்கம் - தருமபுரி

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Mon May 31 20:02:28 BST 2010


கண்காட்சியில் கலந்துக்கொண்டு கட்டற்ற மென்பொருள் பற்றி கருத்துகளை தருமபுரி
மக்களுக்கு எடுத்துரைக்க சென்னையிலிருந்து வந்தமைக்கு ஆமாச்சு , செல்வமுரளி
மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு உபுண்டு குழுமத்தின் சார்பாக நன்றியினை
தெறிவத்துக்கொள்கிறேன்

மேலும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பார்க்கவும்
http://picasaweb.google.com/thangam.arunx/UbuntuStallEducationAndInformationTechnologyExhibitionDharmapuri

31 மே, 2010 7:25 am அன்று, ஆமாச்சு <amachu at ubuntu.com> எழுதியது:

> வணக்கம்,
>
> தருமபுரி, மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை சார்பில் "கல்வியும் தகவல்
> தொழில்நுட்பமும்" என்கிற தலைப்பில் நேற்றைய தினம் கண்காட்சியும் கருத்தரங்கமும்
> நடைபெற்றது[1]. இதில் உபுண்டு தமிழ்க் குழுமம், யாவர்க்குமான மென்பொருள்
> அறக்கட்டளை சார்பில் கலந்து கொண்டு கண்காட்சிக்கு வருகை புரிந்த மக்களுக்கு
> கட்டற்ற
> மென்பொருள் பற்றிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்களையும் உபுண்டு இயங்குதளம்
> பற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம்.
>
> தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து
> வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள்
> புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர்.
> செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக்கும் தருமபுரியாகிய தகடூர் சொந்த ஊர்.
> இந்திகழ்ச்சி
> கடந்த 03/02/2008[2] அன்று தொடங்கி வைக்கப்பட்ட தீர்த்தமலை தகவல் தொழில் நுட்ப
> பயிற்சி மையத்தின் ஒரு தொடரச்சியாகும். அவ்விடத்தே விரைவில்
> கட்டற்ற மென்பொருள் பயிற்சிகளும் தொடங்கவிருக்கின்றன.
>
> நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தலைமை வகிக்க, இற்திய
> ஜளநாயக வாலிபர் சங்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள்
> பலர் கலந்து கொண்டு வழி நடத்தினர். தருமபுரி பகுதி வாழ் மாணவர்களுக்கு
> அப்பகுதியில் இருக்க கூடிய கல்வி வேலை வாய்ப்புகள், வங்கிகளில்
> கிடைக்கூடிய கல்விக் கடன் போன்ற பல்வேறு ஐயங்களுக்கு விளக்கங்கள்
> அளிக்கப்பட்டன.
>
> நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய தோழர்களுக்கும், சென்னை ஸ்கொயர் நெட்வொர்க்
> ஸொல்யூசன்ஸ் பாலாஜிக்கும், அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபுவிற்கும்
> எங்களது
> நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
>
> [1] - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=9102
> [2] -  http://comments.gmane.org/gmane.org.user-groups.linux.ilugc/50313
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100601/873f41ec/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list