[உபுண்டு பயனர்]கல்வியும் தகவல் தொழில்நுட்பமும் - கண்காட்சி கருத்தரங்கம் - தருமபுரி

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon May 31 02:55:42 BST 2010


வணக்கம்,

தருமபுரி, மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை சார்பில் "கல்வியும் தகவல் தொழில்நுட்பமும்" என்கிற தலைப்பில் நேற்றைய தினம் கண்காட்சியும் கருத்தரங்கமும் 
நடைபெற்றது[1]. இதில் உபுண்டு தமிழ்க் குழுமம், யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை சார்பில் கலந்து கொண்டு கண்காட்சிக்கு வருகை புரிந்த மக்களுக்கு கட்டற்ற 
மென்பொருள் பற்றிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்களையும் உபுண்டு இயங்குதளம் பற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம்.

தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் 
புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர். செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக்கும் தருமபுரியாகிய தகடூர் சொந்த ஊர். இந்திகழ்ச்சி 
கடந்த 03/02/2008[2] அன்று தொடங்கி வைக்கப்பட்ட தீர்த்தமலை தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையத்தின் ஒரு தொடரச்சியாகும். அவ்விடத்தே விரைவில் 
கட்டற்ற மென்பொருள் பயிற்சிகளும் தொடங்கவிருக்கின்றன.

நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தலைமை வகிக்க, இற்திய ஜளநாயக வாலிபர் சங்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் 
பலர் கலந்து கொண்டு வழி நடத்தினர். தருமபுரி பகுதி வாழ் மாணவர்களுக்கு அப்பகுதியில் இருக்க கூடிய கல்வி வேலை வாய்ப்புகள், வங்கிகளில் 
கிடைக்கூடிய கல்விக் கடன் போன்ற பல்வேறு ஐயங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய தோழர்களுக்கும், சென்னை ஸ்கொயர் நெட்வொர்க் ஸொல்யூசன்ஸ் பாலாஜிக்கும், அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபுவிற்கும் எங்களது 
நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

[1] - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=9102
[2] -  http://comments.gmane.org/gmane.org.user-groups.linux.ilugc/50313

--

ஆமாச்சுMore information about the Ubuntu-tam mailing list