[உபுண்டு பயனர்]கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Aug 8 14:15:17 BST 2010


வரும் 28 ஆம் தேதி எம் ஐ டி யில் நடக்கப் போகும் கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்தின் பொருட்டு அக்கல்லூரி கணினிச் சங்கத்தின் 
விக்னேஷ் செய்த அறிவிப்பு. பங்கேற்க/ பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். செய்தியை பகிர்ந்து கொண்டும் உதவுங்கள்.

-------------

வணக்கம்,

யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை மற்றும் சென்னை தொழில்நுட்பக்
கல்லூரி<http://csmit.org/>யின்
கணினிச் சங்கம் இணைந்து ஆகஸ்டு 28-ம் நாள் தமிழ் கணிமைக்கான கருத்தரங்கம் ஒன்றை
ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கருத்தரங்கத்திற்கான நோக்கம் யாதெனில்
இனங்காணப்பட்ட கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க
விருப்பமுள்ளோரை ஒன்று கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு வித்திட்டு,
அத்தலைப்புகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு / பங்களிப்புகளுக்கு வழிவகை
செய்வதாகும்.

*இடம்*: ராஜம் அரங்கம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை
*நாள்* : 28-08-2010
*நேரம்*: காலை 9.00 மணி - மாலை 4.30 மணி*
*

மேலும் விவரங்களுக்கு http://csmit.org/index.php/tamconf/home
**
**

-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.


More information about the Ubuntu-tam mailing list