[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல்

Elanjelian Venugopal tamiliam at gmail.com
Fri Mar 20 12:10:17 GMT 2009


அனைவருக்கும் வணக்கம்.

உங்களுடைய உரையாடலின் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உரையாடலில்
நீங்கள் குறிப்பிட்டது போல் நல்ல, அழகான தமிழ் எழுத்துருகள் உபுண்டுவில்
இயல்பாகவே அமைக்கப் பெற்றால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில்
ஐயமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட
எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன்.
ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும்,
படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக
வெளியிடப்பட்டாலும் அவை கட்டற்ற உரிம அடிப்படையில் வெளியிடப்பட்டனவா எனத்
தெரியவில்லை.

மற்றுமொரு தகவல். இங்கு மலேசியாவிலுள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் நான்
கணினிக்கூடங்களை அமைப்பதுபற்றி ஏற்கனவே இக்குழுமத்தில்
அறிவித்திருக்கின்றேன். அக்கூடங்களில் ஒரு கூடத்தை ஓரளவிற்கு அமைத்து
முடித்துவிட்டோம். மொத்தம் 41 கணினிகளில் 21ஐ பொருத்திவிட்டோம். மீதமுள்ள
20ஐ இரண்டொரு நாள்களில் பொருத்திவிடுவோம். உபுண்டு 8.10 LTSP மிகச்
சிறப்பாக சிக்கலின்றி வேலை செய்கின்றது. (இன்னும் இரண்டு வாரங்களில்
மாணவர்கள் கணினிக்கூடத்தை முழுமையாக பயன்படுத்தும்போது சிக்கல்கள்
வெளிப்படலாம்.) தமிழைப் பயன்படுத்துவதிலும் இதுவரை எச்சிக்கலையும்
நாங்கள் எதிர்நோக்கவில்லை. என்ன நிறைய ஆங்கிலச் சொற்கள்
தமிழ்ச்சொற்களுக்கிடைய உபுண்டுவில் இன்னும் இருப்பது உருத்தலாக
இருக்கின்றது. இச்சிக்கல்களில் பல விரைவில் வெளியிடப்படவுள்ள ஜோண்டியில்
தீர்க்கப்பட்டிருக்குமென எதிர்பார்க்கலாமா?

அடுத்தமுறை நடக்கும் கூட்டத்தில் முடிந்தவரை கலந்துகொள்ள் முயல்கின்றேன்.

நட்புடன்,
வே. இளஞ்செழியன்
கோலாலம்பூர்2009/3/17 பத்மநாதன் <indianathann at gmail.com>:
>                               உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார கூட்டம்
> ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து
> ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும்  பயன்யடுத்தும் இயங்குதளம் பற்றி
> கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை   பயன்யடுத்துவது உறுதிசெய்யப்பட்டது.
> பிறகு சேது அவர்கள் சில நாட்களுக்கு முன் திரு. ஆர்னி ஜியோத் ( மொழி சார்பு
> பொறுப்பாளர் - உபுண்டு) அவர்களிடம் மொழி அமர்வின் நுணுக்கம் பற்றி
> கலந்தாலோசித்ததை கூறினார். தமிழ் எழுத்துறுக்கள் பலவற்றையும், குனோம் மற்றும்
> கே.டீ.ஈ. பணி சூழல் இவற்றில் பல நிலைகளில் வடிவமைப்பு பற்றியும்
> விவாதிக்கப்பட்டது. தமிழ் மொழியாக்கம் மற்றும் கையேடு தயாரிப்பு பற்றியும்
> விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 6 மணிவரை நீடித்தது.
> இதனிடையே குமரன் அவர்கள் வீட்டுக்கணினி வேலைசெய்யாததால் கூட்டத்தில்
> கலந்துகொள்ளமுடியவில்லை என தெரிவித்தார்.
>
> கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம்
>
> http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html
>
> பத்மநாதன்
> --
>
> Padhu,
> Pollachi.
>
>
> Knowledge is power !
>
> "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


More information about the Ubuntu-tam mailing list