[உபுண்டு பயனர்]ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரி - கட்டற்ற கணிமை வகுப்பு

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Jan 30 11:53:06 GMT 2009


வணக்கம்,

28.01.2009 ஈரோடு. நந்தா கலை அறிவியல் கல்லூரியில் உபுண்டு தமிழ்
குழுமத்தின் சார்பில் கட்டற்ற கணிமை குறித்த கலந்தாய்வு வகுப்பு
நடைபெற்றது. இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு
பலனடைந்தனர். அனைவருக்கும் கட்டற்ற மென்பொருளின் அவசியம் விளக்கப்பட்டு
உபுண்டு இயங்கு தளத்தின் அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த அக் கல்லூரியின் மாணவர் கனகராஜ் அவர்களுக்கு
நன்றி. நிகழ்ச்சி நடத்திட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்த நந்தா கல்லூரி
நிர்வாகத்திற்கு நன்றி.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list