[உபுண்டு பயனர்]ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்...
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Thu Jan 1 13:05:27 GMT 2009
வணக்கம்,
ஆக்ஸிஸ் வங்கியில் தங்களுக்கு கணக்கு இருந்து அதன் இணையச் சேவையை
பயன்படுத்துகிறீர்களா?
அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக
சொல்கிறது(1).
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் முறைப்படி
பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும்
அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும்.
பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி
வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான
வடிவமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்கி - பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி -
குனு லினக்ஸ் பயன்படுத்துவோருக்கும் ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில்
விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: *ibrm at axisbank.com
*நன்றி.
(1) - http://www.axisbank.com
பி.கு: இவையெல்லாம் தமிழில் எப்போது கிடைக்கப் போகின்றன? அதையும் கேட்போமா?
--
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090101/7934263b/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list