[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Thu Dec 24 06:34:18 GMT 2009


2009/12/22 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:
> On Tue, 2009-12-15 at 20:23 +0530, Yogesh wrote:
>> முனையத்தில் தமிழ் கொண்டு எதை எதை செய்யலாம் ?? முனையத்தில் தமிழை
>> பயன்படுத்துவதன் காரணம் யாது?
>
> வரைகலை முகப்பில் தான் தற்கோது தமிழைப் பயன்படுத்த முடிகிறது.
>

X சாரளம் வழி வரைகலை இடைமுகப்பில் இருந்து இயக்குவிக்கப்படும்
terminal-emulators வகைளில் gnome-terminal, xFce-Terminal மற்றும்
Konsole ஆகிய 3 முனையங்களில் தமிழ் எழுத்துக்களின் தோற்றப்பாடுகளில் உள்ள
வழு நிலைகளை ஒப்பிட நான் உபுண்டு 9.10 இல் ஆக்கிய திரைக்காட்சி :

http://sites.google.com/site/upuntuviltamil/ayvu/terminals-tamil-tests.png .

அத் திரைக்காட்சியிலுள்ள 4 சாரளங்களில் மேல் இடது பக்கத்தில் gedit இல்
காட்டப்படும் உரை உள்ள கோப்பின் cat ஆணை வழியானத் தோற்றப்பாடுகளை ஏனைய
சாரளங்களில் 3 முனையங்களில் காணலாம். எல்லாவற்றிலும் monospace பொதுமை
எழுத்துரு - ஆனால் உபுண்டுவில் monospace க்கு தமிழ் முன்னிருப்புப்
பொருத்தமான Lohit Tamil ஐ ஆழ மட்ட அமைவடிவு மாற்றம் வழியாக விஞ்சி
மாற்றாக சூரியன் எழுத்துருவை நான் பயன்படுத்தி இருக்கையில் எடுக்கப்பட்ட
திரைக்காட்சி அது.

(முன்னிருப்பான Lohit Tamil பயன்படுத்தி இருப்பினும் தோற்ப்பாடுகளில்
உள்ள குறைபாடுகள் அவ்வாறே இருக்கின்றன. ஆனால் எல்லா தமிழ் ttf
எழுத்துருக்கள் பயன்பாட்டிலும் அவ்வாறே ஒருமித்த குறைபாடுகள் வரும் என
முடிவு செய்ய இயலாது. காரணம் TSCu_Paranar உடன் கூடுதலாக எழுத்துக்கள்
உடைந்து வருவதை அவதானித்தும் உள்ளேன் )

ஒற்றை ஒருங்குறிக் குறிப்புள்ளி கொண்ட உயிர் மற்றும் அகர உயிர்மெய்
எழுத்துக்கள் தவிர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்குறிக் குறிப்புள்ளிகளை
உடைய மெய் மற்றும் உயிர்மெய்களின் தோற்றப்பாடுகளை நோக்குவோமானால்
konsole க்கும் ஏனைய இரண்டிற்கும் இடையே ஆன வேறுபாடுகள் முற்றிலும்
முரணாக உள்ளன என்பது புலப்படுகிறது.

gnome-terminal, xFce-terminal களில் மெய்களில் புள்ளி பொருத்துதலும்
ஈகார உயிர்மெய்களில் சுழி பொருத்துதலும் சரியாக நிகழ்கின்றன. ஏனைய உயிர்
மெய்களில் வரிசைமாற்றம் ( Vowel Reordering), எழுத்து வடிவம்
மாற்றிடுதல் (Glyph substitution) மற்றும் உயிரொலிக்குறிகள்
பொருத்துதல் ( Glyph Positioning) என்பனவை பயன்படுத்தப்படும் இடங்களில்
தோற்றமாக்கல்கள் தவறுகின்றன.

ஆனால் konsole இல் நேர் எதிர்மாறாக மெய்களில் புள்ளியும் ஈகார
உயிர்மெய்களில் சுழியும் தோற்றமாவது மட்டும் தவறுகின்றன. ஏனைய
எழுத்துக்களில் எல்லா level 2 தோற்றமாக்கல்கள் சரியாகவே நிகழ்கின்றன.
இவ்வாறு konsole ஒரு பக்கமும் ஏனைய இரண்டு மறுபக்கமும் நேர் எதிர்மாறான
விளைவுகளைக் காட்டுவது வியப்பு அளிக்கிறது.

மெய் மற்றும் இகர, ஈகார உயிர்மெய்கள் கிரந்த உகர ஊகார உயிர்மெய்கள்
ஆகியனவற்றிற்கே புள்ளி அல்லது உயிரொலிக்குக் குறி பொருத்துதல் அகர உயிர்
எழுத்து வடிவத்துக்கு மேல் பக்கத்தில் நடைபெறுவது. அவற்றில் மெய்
மற்றும் ஈகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு மட்டும் அலங்கடையான விளைவுகள்
ஏற்படுவதற்குக் காரணம் யாரும் அறிந்துள்ளீர்களா ?

புள்ளி மற்றும் ஈகார உயிரொலிக்குறி ஆகியன பொருத்துதல்களில் உள்ள வழு நிலை
தீர்க்கப்பட்டால் konsole முனையம் தமிழ் இடைமுகப்புக்குப் போதுமானது என்ன
நிலைப்பாட்டை நாம் எடுக்கலாம்.

ஆனால் konsole இலும் வேறு பிரச்சினைகள் வருகின்றன.

1. தமிழ் இடைமுகப்பில் இருக்கையில் ஆங்கில ஆணைகள் உள்ளிடுகையில்
உள்ளிடும் இடத்தில் cursor இல்லாமல் வலது பக்கமாக இடைவெளி விட்டு
தென்படுகிறது. அது உள்ளிடுவதற்குச் சிரமங்கள் விளைவிக்கிறது.
எழுத்துருவின் அளவுகளை மாற்றி அளவினால் ஏற்படும் பிரச்சினையா அது என்பதை
ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் பின் இதை பற்றி மேலும் எழுதுவேன்.

2. நீண்ட நேர பயன்பாட்டில் konsole உறைந்து போவதாகவும் வழு அறிக்கை ஒன்று
அண்மையில் பார்த்திருக்கிறேன்.

எவ்வாறாயினும் konsole இல் புள்ளி மற்றும் ஈகார உயிரொலிக்குறி தொடர்பான
வழுக்களை அகற்ற வழிகள் உள்ளனவா என்பதை ஆர்வலர்கள் ஆய்வு செய்ய
முன்வருமாறு பரிந்துரைக்கிறேன்.

> நாம் நமது அடைவுகளை தமிழில் பெயரிட்டு வழங்கிகளில் இடுகிற போது, வேறு
> இடங்களில் இருந்து ssh போன்ற முறைகளில் நுழைந்து கோப்புகளை காண விழைந்தால்
> ஏமாற்றங்களே மிஞ்சும்.
>
> இது ஓர் உதாரணம்.
>

உதாரணம் எனக் குறிப்பிட்டது அடைவுகளில் தமிழ் பெயராயின் ssh போன்ற
முறைகளில் நுழைகையில் எழுத்து தோற்றமாகமை என்பதையா அல்லது வேறு ஏதாவது
தொடுப்பைக் காட்ட நினைத்து உள்ளடக்கவில்லையா.

வரைகலை இடைமுகப்பில் அவ்வாறு எற்படுகிறதா ?

~சேது

~சேது


More information about the Ubuntu-tam mailing list