[உபுண்டு பயனர்]உபுண்டுவின் மூலம் மின்பதிப்பாக்கம் செய்வது எப்படி? - தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சி..

ஆமாச்ச ஆமாச்ச
Fri Dec 11 11:34:22 GMT 2009


வணக்கம்,

தமிழ் நூல்களை மின்பதிப்பாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளை
தமிழ் மரபு அறக்கட்டளையாகும். இவ் அறக்கட்டளையின் மின்பதிப்பாக்கப் பயிற்சி
பட்டறை கடந்த ஞாயிறன்று[1] சாப்ட்வியூ[2] நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

அன்றைய தினம் கலந்து கொண்டோருக்கு மின்பதிப்பாக்கத்தில் பயன்படும் கட்டற்ற
மென்பொருள்கள் குறித்த அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. புத்தகப் பக்கங்களை
வருடப்பயன்படும் Xsane, வருடப்பட்ட கோப்பின் அளவைக் குறைக்கப்
பயன்படும் convert ஆணை, Gimp, Inkscape போன்ற மென்பொருள்கள்,
ஒலியோசைகளுக்கான Audacity, Filezilla, Firefox போன்ற மென்பொருள்கள்
அவற்றுள் அடக்கம்.

பங்கு கொண்டு ஆர்வம் காட்டிய சிலருக்கு உபுண்டு வட்டுக்களும் வழங்கப்பட்டன.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் தொடர்புடைய கட்டற்ற மென்பொருள்
திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. 

இரண்டு மாதங்களில் உபுண்டு இயங்குதளத்தை நிறுவி மின்னாக்கம் எவ்வாறு
செய்வது என்பதை விளக்கும் ஆவணத்தை பகிர்ந்து கொள்வதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பயனர்களிடையே உபுண்டு
உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் பரவிட இது வழிவகுக்கும்.

வாய்ப்பினை நல்கிய மின்தமிழ் அறக்கட்டளைக்கும் கணித் தமிழ்
சங்கத்தாருக்கும் நன்றி. 

[1] - http://www.tamilheritage.org/
[2] - http://www.softview.in
[3] - http://www.kanithamizh.in/

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list