[உபுண்டு பயனர்]முனையத்தின் தமிழ் எழுத்துக் கோளாறு

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Wed Dec 16 02:14:20 GMT 2009


2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:
[..]
> தாங்கள் gnome-terminal தனைக் குறிக்கறீங்களா? வெறும் Terminal
> Ctrl-Alt-F1 அதைக் குறிக்கறீங்களா? இப்போ வரும்
> உபுண்டுக்களில் Ctrl-Alt-F1 முனையத்திற்கு இட்டுச் செல்லாது.
>

Ctrl+Alt+F1 பற்றிக் குறிப்பிடுகையில் வாசிக்கும் ஒரு புதிய பயனர்
ஒருக்கால் ஆர்வத்துடன் அவ் விசைகளைச் சொடுக்கி ஒரு வரைகலை அற்ற முனையம்
(console) ஒன்றிற்குச் சென்று மீண்டும் வரைகலை இடைமுகப்புக்குத்
திரும்புவது எப்படி எனக் குழம்பித் திண்டாடி கணினியை இடைநிறுத்தி மீள்
ஆரம்பித்து ஏதாவது சேமிக்காத தரவுகளைத் தொலைப்பதற்கும் சாத்தியங்கள்
உள்ளதால் அவ் அணுகலைப் பற்றி எழுதுகையில் கூடவே வரகலை இடைமுகப்புக்குத்
திரும்பி வருவது பற்றியும் குறிப்பிடுதல் சாலச் சிறந்தது மட்டுமல்ல
அறிந்து எழுதுவோருக்கு ஒரு கடமையும் ஆகிறது என நான் கருதுகிறேன்.

கனோம், கேடிஈ மற்றும் xFce போன்ற கணிமேசை வரைகலை இணைமுகப்புகளில் ஒன்றின்
மூலம் நாம் அணுகுக்கையில் அவ்விடைமுகப்பு இயங்குவது x சாரளத்தில்.
x-சாரளம் 7 வது முனையத்தில். முதல் 6 முனையங்கள் ஒவ்வொன்றிலும்
தேவைப்படின் வரைகலை அற்ற முனையம் ஏற்படுத்தலாம். Ctrl+Alt+F1 விசைகளை
(ஒரே நேரத்தில்) அழுத்தி
முதல் வரைகலை அற்ற முனையத்தை அணுகுவது போல Ctrl+Alt+F7 அழுத்தி வரைகலை
இடைமுகப்புக்கு எங்கிருந்தும் திரும்பி வரலாம்.

* * * * * * * * *

தற்கால உபுண்டுகளிலும் Ctrl+Alt+F1 அல்லது அதில் F1 க்குப் பதில் F2,
F3,..F6 களில் ஒன்று வழியாக ஒரு வரைகலை அற்ற முனையத்தை அணுகலாம்.

எனது வன் தட்டு நிறுவல் உபுண்டு இறுவட்டிலிருந்து செயப்பட்டது. அதாவது
GDM display manager பயன்பாட்டில் உள்ளது. முன்னிருப்பாக வரும் கனோம்
இடைமுகப்பு போக மேலதிகமாக கேடீஈ மற்றும் xFce கணிமேசைகளும் நிறுவி
உள்ளேன். இம் மூன்று கணிமேசைகளிலும்  Ctrl+Alt+Fn  (n = 1,...,7)
ஒவ்வொன்றும் எனக்கு எதிர்பார்க்கும் விதமாக அதன் முனையத்துக்கு
எடுத்துச் செல்கிறது. மேலும் நான் பயன்படுத்தாத KDM display manager
இயக்கதில் நிலவரம் அறிய குபுண்டு நிகழ்வட்டு அமர்வுகளை ஏற்படுத்திப்
பார்த்தேன். ஒரு சில அமர்வுகளில் அமர்வு ஆரம்பிக்கையில் வரைகலை
இடைமுகப்பு உள்ள 7 வது முனையதிற்குச் செல்லாமல் 1 வது முனையதிற்குச்
சென்று வரைகலை அற்ற அமர்வாகத் தொடங்குவதை அவதானித்தேன். அவ்வாறான
அசாதாரண நிகழ்வுகளில் startx ஆணை பயன்படுத்தி கேடீஈ 4 கணிமேசையை அதே 1
வது முனையத்தில் தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் பல குபுண்டு நிகழ்வட்டு
அமர்வுகள் சாதாரண நிகழ்வாக கேடீஈ 4 கணிமேசை 7 வது முனையத்தில் இயங்குவதாக
நடந்தன. எல்லாவிதச் சந்தர்ப்பங்களிலும் Ctrl+Alt+Fn (n = 1,...,7)
செயல்பாடு தடுக்கப் பட்டிருக்கவில்லை.

 ஆமாச்சு குறிப்பிட்ட படி Ctrl+Alt+F1 முனையத்திற்கு இட்டுச்
செல்லாவிடின் அது வழு நிலை காரணத்தினால் தான் இருக்கும் எனக்
கருதுகிறேன். உபுண்டுகளில் Ctrl+Alt+F1 இயக்கமின்மை பற்றிய தலைப்பில்
கூகுளில் தேடல் நடத்துகையில் வரும் பல வழு உரையாடல்களில் nvidia driver
காரணமாக ஏற்படும் அவ்வாறு வழு நிலை ஏற்படுவதாககு குறிப்புகள் உள்ளன.
கருமிக்கில் ஏற்படும் வழு பற்றி பார்க்க :
http://ubuntuforums.org/showthread.php?t=1307449

 ஆங்கிலத்தில் Linux Console என பலவலாகக் குறிப்பிடப் படும் அந்த வரைகலை
அற்ற முனையங்களுக்கு அணுகலைத் தடை செய்யும் விதமாக முன்னிருப்பு இயல்பு
அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்படுத்தமாட்டார்கள் என்பது எனது கருத்து.

எனவே ஆமாச்சு தங்களது கணினியில் அவ் அணுகல்கல் தடைப்பட்டிருக்குமின்
காரணி வழு நிலை பற்றி அலச வேண்டியிருக்கும்.

* * * * **

> KDE Konsole இல் gnome-terminal தனைக் காட்டிலும் தமிழ் எழுத்துக்கள்
> சிறப்பாக காட்டப்படும்.
>

பின்னர் அடுத்த மடலில் தொடர்வேன்

~சேது

>


More information about the Ubuntu-tam mailing list