[உபுண்டு பயனர்]கூட்ட நிகழ்வுகள்

பத்மநாதன் indianathann at gmail.com
Thu Aug 6 13:57:54 BST 2009


             கடந்த வார கூட்டத்தில் திரு. பாலாஜி, திரு.
மோகன் (மேட்டூர்) ஆகியோர் கலந்துகொண்டனர். உபுண்டு தமிழாக்க நிலவரங்கள்
பற்றி பேசினோம். தமிழாக்க வேலைகள் தொய்வாக இருப்பது குறித்து
விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த மாதம் 20-ம் தேதிக்குள் அனைத்தையும்
முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அனைவரும் தம்மால் இயன்ற அளவு
மொழியாக்கம் செய்ய எண்ணமிருந்தாலும் இதுவரை பல்வேறு காரணங்களால்
தடங்களாகிவிட்டது.

              எல்லோரும் ஒன்றினைந்து விரைவாக செயல்பட்டால்
மட்டுமே புத்தக வெளியீட்டை குறித்த நேரத்தில் செய்யமுடியும். ஆகையால்
அனைவரும் முடிந்த அளவு நேரத்தை ஒதுக்கி உபுண்டு தமிழாக்கத்தினை நிறைவு
செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

              இது குறித்த சந்தேகங்கள் மற்றும்
வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு திரு. இராமதாஸ் அவர்களை amachu at amachu.net
என்ற மின்னஞ்சலிலோ 91766 41183 என்ற உலாபேசியிலோ தொடர்பு கொள்ளவும்.

பத்மநாதன்

-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"


More information about the Ubuntu-tam mailing list