[உபுண்டு பயனர்]இதென்ன கூத்து :-(

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Tue Apr 21 04:03:28 BST 2009


ஜாவா <http://java.com/en/> தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ
சிஸ்டத்தை <http://www.sun.com/> ஆரக்கிள்
நிறுவனம்<http://www.oracle.com/index.html> விலைக்கு
வாங்கிவிட்டது <http://www.oracle.com/corporate/press/2009_april/018363.htm>.
ஐபிஎம் சன்னை வாங்கப்
போகிறது<http://www.newsfactor.com/story.xhtml?story_id=030002RRA3YC&full_skip=1>என்று
செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென
ஆன போது <http://www.tradingmarkets.com/.site/news/Stock%20News/2259562/>சற்றே
பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.

இத்தகைய கும்பெனி அக்யூசிஷன் ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய
நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் - மாடாய் உழைத்து எல்லாம் தந்த
தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன்
கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கம்பனியை யார் நடத்தினால்
என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட
வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஆரக்கிள் - மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம
மென்பொருள்<http://www.gnu.org/philosophy/categories.ta.html>நிறுவனம்.
எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம்
கீழே விளங்கும்) உள்ளிட்ட
கட்டற்ற<http://www.gnu.org/philosophy/free-sw.ta.html>இயங்குதளங்கள்
விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின்
தரவுத் தள <http://www.oracle.com/products/index.html#database> ஏக போக
சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ
எல்<http://www.mysql.com/>எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.

முழுவதும் வாசிக்க: http://amachu.net/blog/?p=175

--

ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090421/e8156bc0/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list