[உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல்

பத்மநாதன் indianathann at gmail.com
Sat Apr 11 16:26:35 BST 2009


தோழர்களே,
             கடந்த 05.04.2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,
அமாசு, இரவி, சிவாஜி, அருள்மொழி மற்றும் பத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்மொழியாக்கப் பயிற்சி பட்டறை வரும் மே மாதத்தில்
சென்னையில் நிகழ்த்தலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் உபுண்டுவின்
புதிய பரிணாமம் 'ஜாண்டி' வெளியீட்டு விழாவினை தமிழ்நாட்டின்
எல்லாப்பகுதிகளிலும் உபுண்டு தமிழ் குழுமத்தினரால் நடத்த தக்க ஏற்பாடுகளை
செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் பங்களிக்க விருப்பமுள்ளவர்கள் அமாசு
அவர்களுக்கு 'amachu at amachu.net' என்ற முகவரிக்கு தனித்து மடல்
அனுப்பலாம். அடுத்ததாக 'பயனரின் பார்வையில்' திட்டப்படி எளிய உபுண்டு
துவக்கக்கையேடு ஒன்றை தமிழில் கொண்டுவர தனி கவனம் தேவைப்படுவதை அமாசு
சுட்டிக்காட்டினார்.
		வாராந்திர உரையாடல்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் உபுண்டு தமிழ்
குழுமத்தினரின் நிகழ்ச்சி நிரல்கள் ஆகியவற்றை கீழே உள்ள இணைப்பில்
காணலாம்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=வாராந்திர_இணையரங்க_உரையாடல்


ந. பத்மநாதன்


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"


More information about the Ubuntu-tam mailing list