[உபுண்டு தமிழகம்]உபுண்டு ஆசான் திட்டம்

Anna Kannan annakannan at gmail.com
Wed Oct 8 04:32:39 BST 2008


வாழ்த்துகள். நல்ல முயற்சி.

உபுண்டு பற்றி அறிந்த இன்றைய ஆசான்களைத் திரட்டுவதோடு, நாளைய ஆசான்களைத்
தயார்படுத்தும் பணிகளும் உடனிகழ்வாக நடந்தால் நன்று.

இதற்கான தரவுகளை ஒன்று திரட்டி, இணையத்திலேயே ஒரு பாட வகுப்பு நடத்தலாம்.
நேரடியாகச் சென்று போதிப்பதினும் இணைய வழியே போதிப்பது சற்று எளிது.

முறையான, விரிவான பாடத் திட்டம், தமிழில் உரிய கலைச் சொற்கள், தொழில்நுட்பச்
சிக்கல்களுக்கான தீர்வுகள், உபுண்டுவுக்கும் பிற இயங்கு தளங்களுக்கும் உள்ள
ஒற்றுமை - வேற்றுமைகள், கட்டற்ற மென்பொருள் துறையில் தற்போது நடைபெற்று வரும்
ஆய்வுகள், எதிர்காலத் திட்டங்கள்.... என அனைத்திலும் தேர்ந்தால்தான் சிறந்த
ஆசான் உருவாக முடியும்.

உபுண்டு வகுப்பு, ஒரு தொடக்கமே. தமிழ்க் கணிமை, தமிழ் இணையம், இத்துறைகளில்
வேலை வாய்ப்புகள்... எனப் பல தலைப்புகளிலும் பயிற்சி வகுப்புகள் விரிவு பெற
வேண்டும்.

உங்கள் முயற்சிகளுக்கு என் ஒத்துழைப்பு என்றும் உண்டு.
*
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது
சிறுத்தையே வெளியில் வா.
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செயப் புறப்படு தமிழா!* (பாவேந்தர் பாரதிதாசன்)

அன்புடன் என்றும்
அண்ணாகண்ணன்.




2008 அக்டோபர் 8 08:08 அன்று, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <
amachu at ubuntu.com> எழுதியது:

> வணக்கம்,
>
> வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் "உபுண்டு ஆசான்
> திட்டம்"  எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு
> தமிழ் குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து உபுண்டு/
> டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த பாடங்களை பலதரப்பட்ட
> மக்களுக்கு புகட்டுவர்.
>
> முதற்கண் இரண்டு விதமான பாடங்களை உபுண்டு தமிழ் குழுமம் வழங்க
> விரும்புகிறது...
>
> 1) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் குனு/ லினக்ஸ்
> பயிற்சி வகுப்பு - ஆசிரிய/ மாணவர்களுக்கானது
> 2) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாள் குனு/ லினக்ஸ் பயிற்சி
> வகுப்பு - அலுவலர்/ பொதுவானது
>
> தேவைக்கேற்ப இவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளலாம். மேலும் கோரும்
> நிறுவனத்தை/ அமைப்பைச்  சார்ந்து பாடங்கள் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு
> மொழிகளிலும் போதிக்கப்படும்.
>
> இத்திட்டம் பரஸ்பர ஆதாயத்தினை கருதி மேற்கொள்ளப்படுகிறது. உபுண்டு தமிழ்
> குழுமம் வருங்காலங்களில் தனது திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தன்னைத்
> தானே சார்ந்திருக்க துணை நிற்கும் ஒரு வழியாகவும் இதனைக் கருதுகிறோம்.
>
> உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் எடுக்கும் ஆற்றல்
> தங்களுக்கும் இருக்குமாயின் தங்களையும் உபுண்டு ஆசானாக வரவேற்கிறோம்.
> தமிழில் எழுதிப் பேசி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் எளிய ஆற்றலே மட்டுமே
> இதில் தங்களை இணைத்துக் கொள்ளப் போதுமானது.
>
> மேற்குறிப்பிடப்பட்ட பாடத்திட்டங்களைத் தாண்டி வருங்காலங்கில் நிரலாக்கம்
> உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சேர்க்கவிருப்பம். அத்தகையதை இப்போதே
> தங்களால் தர முடியுமானாலும் பெருமகிழ்ச்சி.
>
> குனு லினக்ஸ் பயனர் குழுக்கள், அரசுத் திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள்,
> கல்விக் கூடங்கள், தனியார்/ வர்த்தக நிறுவனங்கள் என அனைவருடனும்
> இவ்விடயத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கின்றோம்.
>
> உங்களுக்குத் தெரிந்த கல்விக்கூடங்கள், குனு லினக்ஸ் வசதி தேவைப்படும்
> அமைப்புகள் என அனைவருக்கும் இத்திட்டம் பற்றிய அறிவிப்பினை
> தெரியப்படுத்துங்கள். தாங்கள் சார்ந்துள்ள அமைப்பில் இத்தகைய
> நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் amachu at ubuntu.com என்ற
> முகவரிக்கு உடன் மடல் எழுதுங்கள். நாங்கள் நாள் குறிக்கத்
> தொடங்கிவிட்டோம்.
>
> இது குறித்த விகி பக்கம்:
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasan_Thittam
>
> உபுண்டு ஆசான்கள் பற்றி அறிய/ தாங்களும் இணைய விரும்பிடின் பதிய:
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasangal_Vivaram
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>



-- 
Annakannan

Tamil Editor

http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://tamil.sify.com/special/anna_centenary
http://annakannan.blogspot.com
http://www.youtube.com/watch?v=tzFnRewQQ3c
http://www.orkut.co.in/Profile.aspx?uid=3869175922787286676
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081008/29bed66e/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list