[உபுண்டு தமிழகம்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Nov 24 17:48:15 GMT 2008


வணக்கம்,

தாங்கள் இன்டிரிபிட் ஐபக்ஸ் நிறுவியுள்ளீர்கள் என நினைத்துக் கொண்டு இம்மடல்
இயற்றப்படுகிறது. ஆங்கில இடை முகப்பினை முதன்மையாகக் கொண்டோர் SCIM பயன்பாடு
கொண்டு தமிழில் தட்டெழுத விழையின் இம்மடல் பயனளிக்கும். SCIM க்கு தேவையான
அடிப்படை பொதிகள் உபுண்டு நிறுவப்படும் போதே கிடைக்கின்றன. எம்மைப் போன்று xkb
கொண்டு தமிழில் உள்ளிட பழகுவோர் இதனை மேற்கொள்ள வேண்டியக் கட்டாயம் இல்லை :-)

1) தமிழ் தட்டச்சு பலகைகளைப் பெற scim-m17n பொதியை நிறுவிக் கொள்ளவும். இதனைத்
தாங்கள் சினாப்டிக் பொதி நிர்வாகப் பயன்பாடு கொண்டு செய்யலாம்.

2) Alt-F2 கொடுத்து gksudo gedit /etc/profile கொடுக்கவும். கடவுச் சொல்லினைத்
தரச் சொல்லிக் கோரப்படுவீர்கள். கடவுச் சொல்லினைத் தரவும். பின்னர் தோன்றும்
கோப்பில் இறுதியாக கீழ்காணும் வரிகளை இடவும்.

# SCIM
export XMODIFIERS='@im=SCIM'
export GTK_IM_MODULE="scim"
export XIM_PROGRAM="scim -d"
export QT_IM_MODULE="scim"
scim -d

கோப்பினைக் காத்து மூடிவிடவும்.

தற்போதைய அமர்விலிருந்து வெளிவந்து புதிய அமர்வினைத் தொடங்கவும்.

gedit போன்ற ஏதாவதொரு பயன்பாட்டினைத் துவக்குங்கள். Ctrl+Space கொடுத்தால் மொழி
மாறுகிறதா? அதில் தாங்கள் விரும்பும் தட்டச்சு முறையை (தமிழ்99, தமிழ்
தட்டச்சு, பேராபத்து பொனடிக் ;-)) தேர்வு செய்து தமிழில் தட்டெழுதத்
துவங்குங்கள்.

இப்படிகளை பின்பற்றி SCIM கொண்டு தங்களால் உள்ளிட இயலவில்லையென்றால் இங்கே
தெரிவிக்கவும்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081124/afc0904c/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list