[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

Anna Kannan annakannan at gmail.com
Sun May 25 05:11:37 BST 2008


அன்புள்ள ஆமாச்சு,

நலமா?

உங்கள் தொலைபேசி எண் மாறிவிட்டதா? சில முறைகள் முயன்றேன். உங்களைப் பிடிக்கவே
முடியவில்லை.

என் உபுண்டுவில் (Ubuntu 7.10 - the Gutsy Gibbon - released in October 2007)
இணையதளங்களில் உள்ள வீடியோ படங்கள் இயங்கவில்லை. டிவிடியும் இயங்கவில்லை. நானே
இணைய தளங்களில் இது குறித்துத் தேடி,

gxine
helix player
miro
mplayer movie player
VLC media player
Gnash SWF viewer
Penguin TV Media aggregator
Sun Java 6 web start
Flash Plugin - nonfree

.................... எனப் பலவற்றை சினாப்டிக் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக என்
கணினியில் நிறுவினேன். ஆயினும் பயனில்லை. Gnash SWF viewer முழுமையாகத்
தரவிறங்கவில்லை.

யூடியூப், ஆர்குட், சிஃபி, கூகுள் வீடியோ என எந்தத் தளத்தின் வீடியோவும்
இயங்கவில்லை.

வீடியோக்களைத் தரவிறக்கி, Totem திரைப்பட இயக்கி மூலம் முன்பு பார்க்க
முடிந்தது. இப்போது மேற்கூறியவற்றைத் தரவிறக்கிய பிறகு Totem உம் வேலை
செய்யவில்லை.

அடோப் பிளாஷ் பிளேயர் இல்லாததால் தான் இவற்றுள் பலவற்றைக் காண இயலவில்லை.

http://www.adobe.com/shockwave/download/download.cgi?P1_Prod_Version=ShockwaveFlash&ogn=EN_US-gntray_dl_getflashplayer

அடோபை தரவிறக்கலாம் என்றால், .tar.gz, .rpm, YUM ஆகிய மூன்று வகைகளில் எது
வேண்டும் என்று கேட்கிறது. உபுண்டுவுக்கு எதைத் தரவிறக்குவது?

இணைய தளங்களில் வீடியோ பார்க்கும் வசதி என்பது, அடிப்படை உறுப்பாக ஆகி, வெகு
காலம் ஆகிறது. இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? ஏதேனும் ஒரு வழி
சொல்லுங்கப்பா.

அன்புடன் என்றும்
அண்ணாகண்ணன்.

2008/5/24 ஆமாச்சு <amachu at ubuntu.com>:

> வணக்கம்,
>
> முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால்
> வெளியிடப்பட்ட மின்னெழு
> த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம்.
> இவை TAB - TAM வகையை சார்ந்தது போல் தரிகிறது.
>
> அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
> பதிவிறக்கி பயன்படுத்த:
> http://www.ubuntu-tam.org/padhivirakkam/tamizh-fonts-mit-release.tgz
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>-- 
Annakannan

Tamil Editor

http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080525/b6e7da85/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list