[உபுண்டு தமிழகம்]கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும் - கட்டற்ற மென்பொருள் மாநாடு - பிப் 01, 02, 03

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Thu Jan 10 15:13:45 GMT 2008


வணக்கம்,

பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு
நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில்
மரத்தடியின் கீழ் இதுவரை நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற விடயங்களையும் இனி
நடைபெற வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கலாம். அது சமயம் தாங்களும்
இம்மரத்தடி மொக்கையில் ;-) கலந்து கொண்டு சக்கைப் போடு போட உதவுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

துவக்க காலத்திலிருந்து இதற்காகப் பங்களித்தோர் உள்ளிட்ட விவரங்கள்,
மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள், மேற்கொண்டோர் விவரங்கள் உள்ளிட்ட விடயங்களை அறிய
ஆவல். தங்களுக்கு தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080110/ec3885a9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list