[உபுண்டு தமிழகம்]பதிப்பும் நெருப்பும்! - கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க!

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Tue Feb 12 00:28:42 GMT 2008


Nalla vutharanam!!

2008/2/11 ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com>:

> பதிப்பும் நெருப்பும்!
>
> நேற்றுக் கள்ளுக்கடையில் நானிருந்த சமயம் ஒருவன் தனது சிகரெட்டை பற்ற வைக்க
> வேண்டி தீப்பொறிக் கேட்டான். தேவையொன்று உருவாகி பொருளீட்டும் வாய்ப்பொன்றும்
> உருவாவதை உணர்ந்த நான் பத்து பைசாக்கு பற்ற வைக்க ஒத்துக் கொண்டேன். ஆனால்
> அவனுக்கு தீப்பொறியினைத் தந்து விடவில்லை. மாறாக அவனது சிகரெட்டை எரித்துக்
> கொள்வதற்கான உரிமத்தினை மட்டுமே வழங்கினேன். அத் தீப்பொறியின் மீதான எமது
> உரிமம் அவனை அதனைப் பிறருக்கு தருவதிலிருந்து தடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக
> அத் தீப்பொறி என்னுடையதாயிற்றே! அவன் நன்றாகக் குடித்திருந்தான். என்னைப்
> பித்துக்குளி என்று கருதியவாறே எமது தீப்பொறியையும் (உரிமத்துடனான)
> பெற்றுக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றிருக்கும். அவனது நண்பனொருவன் அவனைப்
> பற்றவைக்கச் சொல்ல எனது பதற்றத்தை அதிகப் படுத்தியவனாய் எமது நெருப்பைக் கொண்டு
> அவனது நண்பனுக்கு பற்ற வைத்தும் விட்டான். எனக்கு எரிச்சலாய் இருந்தது.
> கள்ளுக்கடையின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்டேன். எனது எரிச்சலை இன்னும்
> அதிகப் படுத்தும் விதமாக அவனது நண்பன் அவனைச் சுற்றியிருந்த பிறருக்கு பற்ற
> வைத்தான். சிறிது நேரத்திற்குள்ளாக கள்ளுக் கடையின் அப்பகுதியிலிருந்த
> அனையவரும் எமது நெருப்பை எமது அனுமதியில்லாமலேயே பயன்படுத்தத்
> துவங்கியிருந்தனர். ஆத்திரம் தலைக்கேறியவனாய் ஒவ்வொருவரின் மீதும் பாய்ந்து
> அவர்களிடமிருந்து சிகரெட்டுகளைப் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து அணைக்கத்
> துவங்கினேன்.
>
> விநோதமாகக் கதவருகே இருந்த காவலாளி எமது சொத்துரிமைக்கு சிறிதும்
> மதிப்பளியாதவராய் எம்மை இழுத்து வெளியேத் தள்ளி விட்டார்.
>
> --இயன் கிளார்க்
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080211/e6c582d5/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list