[உபுண்டு தமிழகம்]'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்' - கட்டற்ற மென்பொருள் மாநாடு - கொச்சின்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Dec 6 13:23:13 GMT 2008


2008/12/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> இந்நிலை
> முற்றிலும் மாற அந்த அந்த மாநில மொழி தாங்கிய இரு மொழி விசைப்பலகைகள்
> புழக்கத்திற்கு வர வேண்டும். இதுவே நாளை அனைவரது இல்லத்திலும் கணினி
> வரும் போது, சிறு குழந்தையும் தமிழை தட்டிப் பார்க்க கணினியை எட்டிப்
> பார்க்கும் போது எளிதாக்கும்.
>
> (முன்னரே எழுதியது.. தொடர்வேன்...)
>

தமிழில் ஆர்வம் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்
வந்தோருக்கும் தடங்களாக இருந்தது / இருப்பது தட்டச்சு பயிற்சி இல்லாமையே
ஆகும். மேலும் மொழிப்பெயர்ப்பில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக
விளங்குவது பொதுவான சொற்களை ஏற்படுத்திக் கொண்டு மொழிப்பெயர்ப்பாளர்கள்
பயன்படுத்தாது இருப்பது. ஒரே பொருளை உணர்த்தும் இரு வேறு சொற்கள்
இருக்கலாம் என்றாலும் தமிழ் இடைமுகப்புகளை ஒருவர் பயன்படுத்த விரும்புகிற
போது இவை சின்னலாகத் தான் இருக்கின்றன. அரசு சார்ந்த சில மொழிபெயர்ப்பு
முயற்சிகளும் பணி விரயமாக அமைந்து வருத்தத்திற்குரியது.

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அதிக அளவிரான கட்டற்ற மின்னெழுத்துக்கள்
சேர்க்கப்பட வேண்டியுள்ளன. தற்போது இருக்கக் கூடியவை சாதாரண
பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்தாலும் கலை அம்சம் வாய்ந்த கட்டற்ற
மின்னெழுத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. உபுண்டு போன்ற
இயங்குதளங்களில் கிடைக்கும் மின்னெழுத்துக்களும் குறை நிறைந்தவைகளாகவே
இருக்கின்றன. இவற்றைக் களைய மின்னெழுத்துப் பயிற்சி வகுப்பொன்றிற்கு
ஏற்பாடு செய்திருந்தோம். வருங்காலங்களில் இவை சரி செய்யப்படும் என
எதிர்பார்க்கலாம்.

மேலும் டாப்-டாம்-யுனிகோடு என்று பல்வேறு வகை மின்னெழுத்த்துக்கள்
புழக்கத்தில் இருக்கின்றன. ஒன்றிரிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிட
வேண்டிய கட்டற்ற பயன்பாடு தேவைப்படுகிறது. மேலும் தட்டச்சுப் பயிற்சி
செய்ய உதவும் ஒரு பயன்பாடும் தேவைப்படுகிறது.

உரையை குரலாக மாற்றிட வேண்டிய பணிகள், தட்டெழுதும் போது பிழைகளைச் சொல்லி
சரி செய்ய உதவும் ஏற்பாடு, அச்சில் உள்ளவற்றை இனங்கண்டு உரைகளாக மாற்றும்
ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன், உடல் ஊனமுற்றோரும் தகவல் தொழில்நுட்பத்தை
பயன்படுத்திட ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓஆர்சிஏ போன்ற பயன்பாடுகள்,
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெர்க்க உதவும் மொழிபெயர்ப்பு
கருவிகள் என செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

மேலும் குநோம், கே பணிச் சூழல் ஆகிய இரண்டிலும் தமிழ்நாட்காட்டி வசதிகள்
சேர்க்கப்பட வேண்டியுள்ளன. கணினிகள் மக்களைச் சென்றடையும் வேகத்தைக்
காட்டிரும் கையடக்க மொபைல் கருவிகள் வேகமாக சென்றடைந்து விட்டன என்பது
நிதர்சனம். அத்தகைய கருவிகள் கருவிகள் கட்டற்ற மென்பொருளை தாங்கியதாக
தமிழ் வசதிகள் தருவதாக இருப்பது இல்லை. மொபைல் கருவிகளில் கட்டற்ற தமிழ்
வசதிகள் பற்றி ஆர்வம் செலுத்துவோர் தேவை.

மேலும், யாரோ ஒருவர் பயன்பாடுகளை இயற்றுவார் நாம் காலம் முழுவதும்
மொழிபெயர்த்துக்கொண்டௌ இருப்போம் எனும் நிலை போய் நாமே நமக்குத் தேவையான
மென்பொருளை நாமே இயற்றுவதோடு பெரிய/ முக்கியத் திட்டங்களுக்கு
நம்மிடமிருந்தும் பங்களிப்புகள் வர வேண்டும்.

விக்கிபீடியா, விக்சனரி, கணிமொழி உள்ளிட்ட விடயங்களிம் பகிர்ந்து
கொள்ளப்பட்டன. இவையெல்லாம் தமிழில் செய்ய வேண்டும் என்பது ஒரு மலை.
கட்டற்று செய்ய வேண்டும் என்பது இன்னொரு மலை. அடிவாரம் தென்படுகிறது.
ஏறத் துவங்க வேண்டும். ;-)

இங்கே எம்மால் விடுபட்டிருக்கக் கூடிய தங்கள் கற்பனையில் உள்ள தமிழ்
சார்ந்த கட்டற்ற மென்பொருள் திட்டம் ஏதேனும் இருப்பின்
தெரியப்படுத்தவும்.

நன்றி.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list