[உபுண்டு தமிழகம்]அணி பொறுப்பாளரிலிருந்து..

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Thu Apr 24 14:30:41 BST 2008


நண்பர்களே,

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு
முன்னர்<https://wiki.ubuntu.com/TamilTeam?action=info>(2006 ஜீன்) இவ்
உபுண்டு தமிழ் குழுமத்தினை துவக்கினோம். சமர்ப்பணம் குழுவில்
உடனிருந்த கணேஷ் செந்தில் என துவங்கிய ஆதரவு சிறிது காலத்திற்குள்ளாகவே
இலங்கையிலிருந்து மயூரன், சேது, அருணன் ஆகியோரது ஊக்கத்துடன் பெருகியது.

தொடர்ந்து தி வாசுதேவன், இரமண்ராஜ், ஹரிஷ், உமா மகேஸ்வரன், சரவணன், ஹலீம்,
சுவாமிநாதன், விக்ரம் சாய் பாலாஜி, சிவகுமார்,  பாலாஜி, உமா, கென்னத்,
பொன்னுசாமி, சௌமியா, ஹரிராம், முகுந்த், ஜகபர்தீன், ரத்தன், இரவி, அருண்,
ஸாதிஹா, இலட்சுமணன், ஜெயராம், ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸன், ஜனார்த்தனன், பார்த்தன்,
அண்ணா கண்ணன், கார்த்திகேயன்  என தொடர்புகள் விரிய வளரத் துவங்கினோம்.

தொடர்ந்து இருந்த வந்த அனைவரது ஆதரவின் காரணமாக இன்று நாம் புதிய அணிப்
பொறுப்பாளர்களை பெறவிருக்கிறோம்.

அணிப் பொறுப்பாளரிலிருந்து விலகிட விருப்பம் தெரிவித்து ஏற்க இயலுமா எனக்
கேட்டதும் <http://logs.ubuntu-eu.org/freenode/2008/04/19/%23ubuntu-tam.html>ஏற்க
முன்வந்த தங்கமணி அருண் மற்றும் அப்துல் ஹலீமுக்கு மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் தலைமையில் இக்குழுமம் மென்மேலும் வளர இறைவனை
வேண்டிக் கொள்கிறேன்.

புதிய பொறுப்பாளர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து
கொள்கிறேன்.  அவர்களுக்கு தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நல்கிடுமாறும்
கேட்டுக் கொள்கிறேன்.

முழுமையாக பொறுப்புகளை இவர்களிருவருக்கும் விடுக்கும் வரை ஆதரவளிப்பதுடன்
தொடர்ந்து இக்குழுவின் வேறு பணிகளில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080424/6d51a6e8/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list