[உபுண்டு தமிழகம்]மென் விடுதலை நாள் விழா - செப்டம்பர் 15

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Sep 13 03:20:19 BST 2007


செப்டம்பர் 15 உலகமெங்கும் மென் விடுதலைக்கான நாளாக அனுசரிக்கப் படுகின்றது.

அன்றைய தினம் உலகனைத்திலும் உள்ள குனு/ லினக்ஸ் உள்ளிட்ட கட்டற்ற மென்பொருட்கள் பயனர் குழுக்கள், 
கட்டற்ற மென்பொருள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு 
செய்வது வழக்கம்.

சென்னையில், ஜெயா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 14 ம் தேதி காலை 9 மணிக்குத் துவங்கி இந்நி
கழ்ச்சிகள் நடை பெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை என்.ஆர்.சி.பாஃஸின் இயக்குநர் சி.என்.கிருஷ்ணன் 
துவக்கி வைக்க உள்ளார்.

செப்டம்பர் 15 தேதி மாலை குரோம்பேட்டை, எம்.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள , என்.ஆர்.சி.பாஃஸ் மை
யத்தில் மாலை 3 மணிக்குத் துவங்கி மென் விடுதலை நாள் கொண்டாடப் பட உள்ளது.

கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list