[உபுண்டு தமிழகம்]அமர்வின் மொழியும் அம்மொழியின் வசதிகளும்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat May 12 16:47:50 BST 2007
அன்பர்களுக்கு,
முன்னர் கேயுபுண்டுவினை தமிழில் நிறுவி அதற்கான வழிமுறைகளையும் அதனைத் தொடர்ந்து தமிழ்
வசதிகளை மேலும் பெறுவதற்கான வழிகளையும் விளக்கி இரு பக்கங்களை அனுப்பியிருந்தோம்.
இங்ஙனம் நிறுவும் பட்சத்தில் ஓபன் ஆபீஸ், கான்கொயரர், கேமெயில் உள்ளிட்ட செயலிகளில் தமிழ் எழுத்து
க்கள் உள்ளிடுவதில் சிக்கல் இல்லை. கேட் உரைத் தொகுப்பு செயலியில் சொற்கள் தட்டெழுதுகையில் சிறு
சிக்கல் இருந்தாலும் சொற்களை முடிக்கும் சரியாகக் கோர்க்கப் பட்டு காட்சியளித்தன.
பின்னர் அமர்வின் மொழியினை ஆங்கிலத்துக்கு மாற்றிய தமிழ் வசதிகளைப் பொறுத்த வரையில் அதிக மா
ற்றங்களை கண்டெடுக்க நேர்ந்தது.
ஒபன் ஆபீஸினைத் திறந்து Ctrl-Space தட்டினால் SKIM எழும்பவேயில்லை. கேட், கேமெயில் போன்ற செ
யலிகளிலும் தமிழ் உள்ளிடுவதில் சிக்கல் இருந்தன.
இவற்றைக் கொண்டு பார்க்கையில் ஓரமர்வின் இயல்பாய் இருக்கும் மொழிக்கும் அம்மொழியின் வசதிகள் கிடை
க்கப் பெறுவதற்கும் அதிக தொடர்பிருப்பதை ஊகிக்க முடிகிறது. இயல்பாய் தேர்ந்தெடுக்கப் பட்ட மொ
ழியினை அடிப்படையாகக் கொண்டு பின்னணியில் இயங்ககூடிய மறைநிரல்கள் இதற்கு காரணமாக இருக்கலா
ம்..
தேர்ந்தெடுக்கப் பட்ட மொழியினைக் கொண்டு தூண்டப்பட்டு செயல்படும் நிரல்கள் யாவை? உபுண்டுவில் இதன்
நிலையென்ன?
ஆக தமிழ் வசதிகள் கிடைக்க விரும்புவோர் தமிழை நிறுவும் போதே முதன் மொழியாக தேர்வு செய்யு
மாறு நாம் பரிந்துரைக்கலாம்... அவசியம் ஏற்படின் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளச் சொல்லலாம்..
நன்றி... :-)
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam
mailing list