[உபுண்டு தமிழகம்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Mar 8 03:11:40 GMT 2007


தொடர்ச்சி...

இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும்
அவை மாறுபட்டு நிற்கின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே
மாறுபட்டு நிற்கின்றன. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால்
சுயயுரிமைப் வேறுபட்டது என்பதை சுயமாக யூகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில்
தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம்.

"அறிவுசார் சொத்து" என சாதாரணமாக மக்கள் ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த
வகையைச் சுட்டும் பொருட்டு சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை
நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை சுமத்துகிறார்கள்.
அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள். சில சட்டங்கள் அப்படி
இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் அப்பதம்
தங்களுக்கு பரிசயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக்
கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை
தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக "சட்டபூர்வமாக
காலனியாதிக்கம்" போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியான சொற்களை
பயன்படுத்தலாம்.

சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே
"அறிவுசார் சொத்து" எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை
சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு
முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு
பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார்,

அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக
அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப்
போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக்
கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை
அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன்
அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.

தொடரும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070308/ad5720f0/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list