[உபுண்டு தமிழகம்]பெறுமதி அஞ்சல் சேவையில் - உபுண்டு நிகழ் வட்டுக்கள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jun 30 02:58:26 BST 2007


உங்களின் அன்பிற்கினிய உபுண்டு நிகழ் வட்டுக்கள் இனி பெறுமதி அஞ்சல் (Value
Payable Post) சேவையின் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

தாங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் வட்டொன்றுக்கு ரூ 150/- ம்,
பாரதத்தின் பிற பகுதிகளில் வசிப்பவராக இருந்தால் ரூ 200/- ம், அஞ்சல் காரரிடம்
செலுத்தி விட்டு நிகழ்வட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் உபுண்டு தமிழ் குழுமத்தின் "அஞ்சலில் உபுண்டு
திட்டம்"<http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1>தொடரும்.

பெறுமதி திட்டம் துவக்கப் படுவதன் ஒரு நோக்கம் கட்டற்ற மென்பொருள் என்பது
சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதை பதிய வைப்பதும் ஆகும்.

மேலும் உபுண்டு தமிழ் குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தாங்கள் தோள்
கொடுக்க இதையும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

உங்கள் தேவைகளை amachu at ubuntu.com என்ற முகவரிக்குத் தெரியப் படுத்துங்கள்.
எங்களின் வளர்ச்சிக்குத் தோள் கொடுங்கள்.
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070630/35e39cd4/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list