[உபுண்டு தமிழகம்]மென்பொருள் சுதந்திர தின முன்னோட்டம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Jun 24 18:49:39 BST 2007


பாரதத்தின் சுதந்திரப் பெரும்போர் நிகழ்ந்து 150 ஆண்டுகள்! ஆகஸ்ட் 15 நமது சுதந்திர தினம். 
அப்படியே ஒரு மாதம் நீட்டிக் கொண்டால் அகிலமனைத்தும் கொண்டாடத் துவங்கியுள்ள மென்பொருள் சுதந்தி
ரத் தினம்.
செப்டம்பர் 15, கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வண்ணம் மென்பொருள் சுதந்திர தி
னம் கொண்டாடப் பட்டுவருகிறது. மக்களிடையே கட்டற்ற மென்பொருட்கள் குறித்த விழிப்புணர்வினை 
ஏற்படுத்த வேண்டியும் அதன் அவசியத்தினை வலியுறுத்தியும் இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
இதனை சென்னையில் கொண்டாட வேண்டி குழுவொன்றினை அமைத்துள்ளோம். 
http://softwarefreedomday.org/teams/asiaandmiddleeast/india/chennai இதனை மே
ற்கொண்டு எங்ஙனம் எடுத்துச் செல்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. 
முதற்படி மட்டுமே தாண்டப் பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களையும் அறியத் தரலாமே!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list