[உபுண்டு தமிழகம்]உபுண்டு தமிழ் கோளரங்கம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 7 04:52:18 BST 2007


வணக்கம்,

உபுண்டு கோளரங்கம் பார்த்திருப்பீர்கள் : http://planet.ubuntu.com/

இதைப் போல் தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல். அதன் ஒரு சிரு முயற்சியாக
விளைந்தது தான்:  http://www.ubuntu-tam.org/planet/

தாங்கள் இதற்காக தனியாக எழுதணும்னு அவசியம் இல்லை.

நீங்க பயன்படுத்தி வரக்கூடிய blogspot, wordpress மாதிரி உள்ள வலைப்பதிவின்
உபுண்டு/ குனு வகைப்படுத்தப் பட்ட rss feed  முகவரியை, எமது மின்னஞ்சல்
முகவரிக்கு  அனுப்பி வைத்தால் போதுமானது.

உங்கள் முகத்தின் படத்தினையும்  (100X100) .png வடிவில் அனுப்ப மறக்காதீர்கள்.

உபுண்டு தமிழ் உலகிற்கு உங்களின் பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. தமிழில்...

தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும் வகை  செய்வோம்! வாரீர்!

இச்சிந்தனைக்கு வித்திட்ட ஷங்கருக்கு மன்மார்ந்த நன்றிகள்.

நன்றி.

பி.கு:  தற்சமயம் இதனை  எமது கணினியிலிருந்து தினசரி புதுப்பிக்கத் திட்டம்.
சிறிது காலம் சென்ற பின்னர் சுயமாக மாற்றங்கள் நிகழும் வண்ணம் செய்கிறோம்.
உங்கள் காலை  நேரக் காபி இனி உபுண்டு தமிழ் உலகுடன் இருக்கட்டும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070607/a698a7bc/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list