[உபுண்டு தமிழகம்]ஆகிசையை ஆதரிப்போம்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Jun 3 10:05:41 BST 2007


இன்னிசை... கேள்விப்பட்டிருக்கேன்! தமிழிசை... தன்னிகரற்றது!

ஆகிசை? இதென்னடா.. புதுக் கதை...

முதற்சொன்ன இசைகள் மாத்திரமல்ல! உலகின் அனைத்து இசைகளையும் இனிதே கேட்க உதவும்
டிஜிட்டல் இசை வடிவம் ஆக்...(Ogg)

அப்படீன்னா?

எம்.பி.3 தெரியுமான்னு கேட்டா! எம்.பி.3 தெரியாதவன் இந்த நாட்ல உண்டான்னு
பதிலுக்குக் கேப்பீங்க! ஆகிசையும் அப்படித்தான். எம்.பி.3 மாதிரி ஆனா எம்.பி.3
இல்ல...

என்னடா குழப்பற!

ஆமாங்க...

குதற்கமா பேசாதே..

குழப்பாம விஷயத்தைச் சொல்லுனு நீங்க சொல்ல வர்றது புரியுது!

ஆகிசை டிஜிட்டல் உலகில் இசைகளின் ஒரு வகை வடிவம். இப்போ புரியுதா ஏன் அது
எம்.பி.3 மாதிரின்னு சொன்னேன்னு!

ஆனா எம்.பி.3 போல இது பேடன்ட் உரிமங்களினால் கட்டுப் படுத்தப் படாத கட்டற்ற இசை
வடிவம்! இதை பயன்படுத்த உரிமங்கள் பெறவோ அதுக்கான கட்டணம் செலுத்தவோ
தேவையில்லை.

ஏதுடா இது.. ரங்கநாதன் தெருலேயும், பர்மா பஜார்லேயும் கூவி கூவி விக்கறாங்க...
இவன் என்னடா புதுசா பூ சுத்தறான்னு தோணுதா! நெசந்தான்!

நம்புவீங்களா! எல்லாருக்கும் மை போடற மைக்ரோசாஃடே சமீபத்துல இது விஷயத்துல
கிட்டத்தட்ட 150 கோடி டாலர் நஷ்டமடஞ்ச கதை தெரியுந்தானே!

சரி அதனால என்ன! எனக்கு ஓசில கிடைக்குது நான் பயன்படுத்தறேன்னு நீங்க சொல்றது
எனக்குத் தெரியுது! பெரும்பாலும் விண்டோசே அப்படித் திருடித் தானே
பயன்படுத்தறாங்க! இது அதுல தம்மாந் துண்டு!

என்னடா திருடன்னு சொல்றே!

உண்மைதானே! ஆயிரங்கள் கொடுத்து வாங்கணும், வாங்கினப்பறமும் அடுத்தவனுக்கு
கொடுக்க உனக்கு உரிமையிலைன்னு சொல்ற பொருளை அலேக்கா ஓசில சி.டில அடிச்சு
பயன்படுத்தினா அது திருட்டு இல்லையா!

சரி! நிறுத்து. எல்லாரும் செய்யறாங்க நானும்.. செய்யறேன்..

ஆட்டு மந்தை மாதிரி! அப்படி தானே!

போதும்! இப்ப என்னத் தான் பண்ணனுங்கற..

காசு கொடுத்து விண்டோஸ் வாங்கினா ஓரளவுக்காச்சும் ஒத்துக்களாம்! விண்டோசிலேயே
ஆகிசைக்கான வசதி செஞ்சுக்கோங்க! இதுவும் இரண்டாம் பட்சந்தான்...

முதலும் முதன்மையானதுமானத் தேர்வு, உபுண்டு மாதிரி குனு/ லினக்ஸ் வெளியீடுகள்
பயன்படுத்தி ஆகிசைக் கேக்கறது!

பாட்டெல்லாம் எம்.பி.3 யா இருக்கு! என்ன செய்ய.. அடாசிடின்னு ஒரு செயலி..
அற்புதமா அதை ஆகிசையாக மாத்தி தரும்..

குநோம்னா (உபுண்டு) இருக்கவே இருக்கு ரிதம்பாக்ஸ்.. கேடீயீன்னா (கேயுபுண்டு)
அமராகின் அற்புதம்.. வேறென்ன வேணும்..

இதெல்லாம் நடக்கற காரியமான்னு நினைக்காதீங்க! இப்படி எல்லாரும்
சொல்லிகிட்டுருந்தா யாருதான் சுழி போடறது..

எண்ணித் துணிக கருமம்! நடத்திக் காட்டத் தானே நாம இருக்கோம்!
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070603/8351a6fe/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list