[உபுண்டு தமிழகம்]சென்னையையைச் சுற்றி - கட்டற்ற மென்பொருள் இயக்கங்கள் - அறிமுகம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Jul 29 07:36:55 BST 2007


கட்டற்ற மென்பொருள் காலத்தின் கட்டாயம்! தமிழகத்துல இருக்கேன்! இங்கே
இதுக்கு ஏதாச்சும் வழியிருக்கான்னு கேக்கறீங்களா! ஏன் இல்லை! à®
றியாதவற்கு இது ஒரு à®
றிமுகமாகட்டும்!
சென்னை லக்

சென்னையிலும் தமிழகத்திலும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கொள்கைகளையும் à®
து சார்ந்த தொழில் நுட்ப விஷயங்களையும் சிரமேற்கொண்டுள்ள குழுமம்.
கல்லூரிகளுக்குச் சென்று கட்டற்ற மென்பொருட்கள் குறித்த à®
றிமுக வகுப்புகளை நடத்துவது மாணவச் செல்வங்களுக்கு உறுதுணைபுரிவது முதலிய பணிகளை ஆற்றிவருகின்றது! ஆங்கில வழி தான்! காலம் வழி காட்டும்! மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சென்னை ஐ.ஐ.டியில் தொழில்நுட்ப
விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

நேற்றிலிருந்து சென்னை எம்.ஐ.டியிலும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளது. இது மாதத்தின் நான்காவது சனிக்கிழமை தோறும் நடைபெறும். எப்.எஸ்.எப் னுடைய தமிழகப் 
பொறுப்பிலுள்ளவர்களும் இதில் à®
ங்கம்.

மேலும் விவரங்களுக்கு: http://chennailug.org/

உபுண்டு குழுமம்

இது நம்ம சமாச்சாரம். கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்டு விநியோகிக்கப் படும் இயங்குதளங்களில் உபுண்டுவும் ஒன்று! “à®
னைவருக்கும் மானுடம்” என்பது இவ்வாப்பிரிக்கச் சொல்லின் பொருள்!
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகத் துவக்கப் பட்டு, தொழில்நுட்ப
விஷயங்களை மற்ற எல்லாவிஷயங்களைப் போல நம்மொழியில் பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபோட்டு வருகிறது. இதற்கு பொறுப்பாக
இருக்கின்றோம். 

என்.ஆர்.சி.பாஃஸ்

கட்டற்ற மென்பொருள் குறித்த கலாமின் கனவினை நினைவாக்க à®
ரசிடமிருந்து ஒரு முயற்சி! குரோம்பேட்டையில் மை.ஐ.டி வளாகத்தில் இயங்கிவருகிறது!
எம்.ஐ.டி யின் முன்னாள் மாணாக்கரும், ஜாம் கிராக்கர் எனும் நிறுவனத்தை
நிறுவிய கே..பி. சந்திரசேகர் என்பவரது ஒத்துழைப்புடனும் à®
ண்ணா பல்கலைக் கழகத்தின் துணையுடன் இயங்கி வருகிறது! சி.டி.ஏ.சி ன் மூலம் பாரத் ஆபரேடிங் சிஸ்டம் கொண்டு வந்தது இதன்
சிறப்பம்சம்! மாணாக்கருக்கு à®
வர்களது தொழில்நுட்ப ப்ராஜெக்ட் களில்
துணைபுரிவது, கட்டற்ற மென்பொருட்களில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது இதன் செயல்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது! விவரங்களுக்கு: http://bosslinux.in/ & http://nrcfoss.org.in/

எல்காட்

இது à®
ரசாங்கமே பட்டையக் கிளப்பற விஷயம்! சும்மாச் சொல்லக் கூடாது 30000 கணினிகள்! எல்லாம் விண்டோஸ் இல்லாமன்னா சும்மா à®
திருதில்ல!
à®
ண்டாக்கா கசம்! à®
பூக்கா ஹுக்கும் திறந்திடு சூசே ! ஆம்! தமிழக à®
ரசின் பஞ்சாயத்து முதலியத் தேவைக்களுக்காக சூசே குனு/ லினக்ஸ் வழங்கலின் முப்பதாயிரம் பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து à®
சத்தியது இந்நிறுவனம்! 

à®
தோட சொன்னா மட்டும் போதாது செஞ்சும் காமிக்கறோமுனுட்டு தன்நிறுவனத்தின் à®
னைத்து தகவல்தொழில் நுட்பவளங்களையும் கட்டற்ற மென்பொருட்களால் கட்டமைத்துக் காட்டியுள்ளார்கள் இவர்கள்!
எல்லாத்துக்கும் மூளைக் காரணம் இதன் இயக்குநர் திரு. உமாசங்கர் இ.ஆ.ப à®
வர்கள்! இது குறித்த யூ.ட்யூபில் பதிவேற்றப் பட்டுள்ள பதிவொளித் தொகுப்பு: http://www.youtube.com/watch?v=3_g72GcaIdc
ஏன் ஆங்கிலத்துல மட்டும் இருக்குன்னு இன்னும் எனக்கு விளங்கல! :-(

-- 
à®
ன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070729/337a92a1/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list