[உபுண்டு தமிழகம்]ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Feb 23 16:55:00 GMT 2007


தொடர்ச்சி,

இருந்தாலும், மூல நிரல்களைப் பார்வையிட முடியும் என்பதே திறந்த மூல
மென்பொருட்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கமாக விளங்குகிறது. பெரும்பான்மை
மக்களும் இதையே அதன் பொருளாகக் கருதுகின்றனர். இது கட்டற்ற
மென்பொருட்களின்விளக்கத்தினைக் காட்டிலும் மிகவும் வலுகுறைந்த விளக்கமாகும்.
ஏன் திறந்த மூல மென்பொருள்களின் விளக்கத்தோடு ஒப்பிடுகையிலும் இது வலுகுறைந்த
விளக்கமே. இவை கட்டற்ற மென்பொருட்களிலும் சாராத திறந்த மூல மென்பொருட்களிலும்
சாராத பல மென்பொருட்களை உள்ளடக்கியது.

திறந்த மூலம் என்பதன் மெய்ப்பொருளை அதன் உரைஞர்கள் சரியாக எடுத்துரைக்காததால்
மக்கள் அதனைத் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்.

திறந்த மூலத்திற்கான நீல் ஸ்டீபன்ஸனின் விளக்கம் வருமாறு,
*எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மூல நிரல்களின் கோப்புகள் கிடைக்கப் பெறுகிற
காரணத்தினால் லினக்ஸ் என்பது திறந்த முல மென்பொருளாகும்.*
*
*அவர் வலிந்து வந்து திறந்த மென்பொருளுக்கான அதிகாரப் பூர்வ விளக்கத்தினை
மறுத்தாகவோ/ மாற்றியுரைத்ததாகவோ நாம் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் வழக்கத்திலுள்ள
சில முறைகளைக் கொண்டு அப்பதத்திற்கு ஒரு விளக்கமளிக்க முன்வந்தார்.

கன்ஸாஸ் மாகாணமும் இத்தகைய விளக்கமொன்றினை அளித்தது.

திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். எந்த மென்பொருட்களின் மூல
நிரல்கள் இலவசமாக பொதுமக்களுக்கு கிடைக்கிறதோ அவை திறந்த மென்பொருட்களாகும்.
ஆயினும் அதைக் கொண்டு ஒருவர் என்ன செய்யலாம் என்பதை அம் மென்பொருட்கள் எந்த
உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறதோ அது தீர்மானிக்கும்.

அதிகாரப் பூர்வ விளக்கத்தினை சுட்டி இதனை சரி செய்ய திறந்த மென்பொருள்
குழுவினர் முயல்கிறார்கள். நமது பிரச்சனையை களைவதில் நமக்கிருக்கும் சிக்கலைக்
காட்டிலும் அது அவர்களுக்கு அதிக சிக்ககலுடையதாக உள்ளது.. கட்டற்ற
மென்பொருளுக்கு இயற்கையாகவே இரண்டு அர்த்தங்களுண்டு. ஒன்று அதன் உண்மைப்
பொருள். பேச்சுரிமை என்பதிலுள்ள "ப்ரீ" போன்றது என்பதனை ஒருவர் ஒருமுறை
உள்வாங்கிக் கொண்டால் போதும். மறுமுறை தவறேற் பட வாய்ப்பு இல்லை. ஆனால் திறந்த
மென்பொருள் என்பதற்கு இயற்கையாகவே ஒரு எதிர்மறைப் பொருளுண்டு. இது அதன்
ஆதரவாளர்கள் விளக்க முற்படுகிற பொருளுக்கு முரணானது. எனவே திறந்த மென்பொருளின்
அதிகாரப் பூர்வ விளக்கத்தினை தெளிவாக விரித்துரைக்க வழியில்லாது போகிறது. இது
குழப்பத்தினை மேலும் அதிகரிக்கிறது. மாறுபட்ட தார்மீகங்கள் ஒத்த முடிவுக்கு
வரலாம் என்பது உண்மைதான். ஆனால் எப்போதும் இப்படி இருப்பதில்லை!
தொடரும்...

முழுப் பக்க்தினையும் படிக்க:
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/
திறந்த_மென்பொருட்கள்_ஏன்_கட்டற்ற_மென்பொருட்களாகா!

அன்புடன்,
ஆமாச்சு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070223/71cb0667/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list