[உபுண்டு தமிழகம்]ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Feb 16 15:25:48 GMT 2007


தொடர்ச்சி....

ஏறத்தாழ அனைத்து திறந்த மூல மென்பொருட்களும் கட்டற்ற மென்பொருளே. இரண்டு
பதங்களும் கிட்டத் தட்ட ஒரே வகையான மென்பொருட்களையே குறிக்கின்றன. ஆனால்
அடிப்படையில் வேறுபட்ட தார்மீக நோக்கங்களைப் பிரதிபலிப்பவை இவை. "திறந்த மூலம்"
என்பது மென்பொருள் உருவாக்கத்திற்கான ஒரு வழிமுறை. "கட்டற்ற மென்பொருள்" என்பது
ஒரு சமூக இயக்கம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்திற்கு, "கட்டற்ற மென்பொருள்"
என்பது தார்மீகக் கட்டாயம்.

ஏனெனில் கட்டற்ற மென்பொருள் மட்டுமே பயனரின் சுதந்திரத்திற்கு
மதிப்பளிக்கின்றது. மாறாக திறந்த மூல கொள்கையோ நடைமுறையில் மென்பொருள்
உருவாக்கத்தினை செம்மைப் படுத்தும் ரீதியில் பிரச்சனைகளை அணுகுகிறது. அது
தனியுரிம மென்பொருட்களை முழுமையில்லாத் தீர்வாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால்
கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினைப் பொறுத்தவரை தனியுரிம மென்பொருளென்பது ஒரு
சமூகப் பிரச்சனை. கட்டற்ற மென்பொருட்களைத் தழுவுவதே இதற்கானத் தீர்வு.

ஒரே மென்பொருளுக்கு கட்டற்ற மென்பொருள், திறந்த மூலம் என்ற இரண்டு பதங்களுமே
பொருந்துமாயின் எப்பதத்தினை பயன்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றா? ஆம்.
ஏனெனில் வெவ்வேறு பதங்கள் வெவ்வேறு அர்த்தங்களைப் பிரதிபளிக்கின்றன. வேறொரு
அடைமொழியுடன் வழங்கக் கூடிய மென்பொருளொன்று அதே சுதந்திரத்தினை இன்றைய
சூழ்நிலையில் தரவல்லதாயினும், மக்களுக்கு சுதந்திரத்தின் மகத்துவத்தை
உணர்த்துவதன் மூலமே சுதந்திரத்தினை நீடித்து நிலைக்கச் செய்ய முடியும்.

கட்டற்ற மென்பொருளியக்கத்தினராகிய நாம் திறந்த மூல சமூகத்தினை எதிரானதாகக்
கருதவில்லை. தனியுரிம மென்பொருளையே எதிரானதாகக் கருதுகிறோம். அதே சமயம் நாம்
சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர்கள் என்பதை மக்கள் அறிய விழைகிறோம். ஆகையால்
திறந்த மூல ஆதரவாளர்கள் என அடையாளங் காணப்படுவதை நாம் ஏற்கவில்லை.

தொடரும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070216/1614d2fb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list