[உபுண்டு தமிழகம்]பெயரைத் தேர்வு செய்யுங்கள்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Apr 29 03:22:40 BST 2007


திரு. இரமண்ராஜ் அவர்களுக்கு,

உபுண்டுவின் வழித்தோன்றல்களாய் இயங்குதளங்கள் உருவாக்குவது உபுண்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப் படு
கிறது.

இதன் பொருட்டு கேடீயினை அடிப்படையாகக் கொண்டு நாம் இயங்கு தளம் ஒன்றினை உருவாக்கத் திட்டமிட்டோ
ம்.  இதற்கு முத்தி என்ற பெயரையும் பரிந்துரைத்திருந்தோம்.  

கணேஷ் அவர்கள் முருகு என்ற பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.  

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/பேச்சு:முத்தி

அவிழ், கடல், காற்று, பறை, காவிரி, முல்லை போன்ற பெயர்களும் புறத்தே  பரிந்துரைக்கப் பட்டன.

"வசுதேவ குடும்பகம்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற "உபுண்டு"விற்கு இணையான பாரதீய 
தத்துவங்களால் இத்திட்டம் ஊக்குவிக்கப் படட்டும். 

மென்பொருட்களின் மெய்ப் பொருள் என்பது மூல நிரல்கள்.  எனவே "மெய்ப் பொருள் காண்பதறிவு" வள்ளுவப் 
பெருந்தகையின் வாக்கு இதன் பிரச்சார வாக்கியமாக அமையட்டும்.

முத்தி?  முருகு? ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

நன்றி...
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list