[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

Ramanraj K ramanraj.k at gmail.com
Sun Apr 15 03:28:05 BST 2007


On 4/14/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> > Has anyone devised coding standards for programming in Tamil?  If none
> > exist, then please do discuss about having one in the light of what
> > should be possible with Unicde.  It would be a long and arduous task
> > but a necessary one to maintain the glory and traditions of Tamil.
> >
>
> இது விஷயமாக பங்களூரில் ஒருவர் ஹிந்தியில் கட்டளைகளை செய்தது தெரிய வந்தது.
> மார் for kill etc.,

அன்புள்ள ஸ்ரீராம்தாஸ் அவர்களுக்கு,

தமிழிலும் அது சுலபமே.

echo 'kill $1'  > கொல்
chmod 755 கொல்
./கொல்   எண்

இது மாதிரி அனைத்து கட்டளைகளுக்கும் தமிழ் அட்டை (wrapper) வழங்கி
உபயோகிக்கலாம்.  இந்த முயற்சிக்கு நான் முழு பொறுப்பேற்கவும் தயார்.
கொல் சரியா அல்லது அதற்கு பதில் முடி என மொழிபெயற்ப் சரியா போன்றவை குழு
மூலம் தீர்மானம் செய்யலாம். நாம் வழங்கும் தமிழ் பெயர்களுக்கு அவரவர்
விரும்பும் அடை (alias) பெயர்களை சூட்டி உபயோகிக்கலாம்.

ஆனல், இதில் நீங்கள் குறிப்பிட்ட சிக்கல் நீடிக்கும்.  அட்டையை பிரித்து
படிக்கும் தமிழ் நேயர்கள், ஆங்கில நிரல்களை படித்து அறிய முடியாத நிலை
மாற விரும்பினால் தமிழில் கட்டளைகளை எழுதும் முறை சிறந்தது.  அது
முடியுமா என்பதைவிட தேவையா என்பது பலரும் கேட்பார்கள்.  TRON operating
system முழுக்க முழுக்க ஜப்பானிய பொழியிலேய எழுதப்பட்டுள்ளது.  ஜப்பானிய
தொழில் நுட்ப கருவிகள் அனைத்தும் TRON மூலம் இங்குகின்றன.  தமிழில் இது
போன்ற முயற்சிகள் ஏன் முடியாமல் போயிற்று?  விரும்பினால் முடியும்.

அன்புள்ள,
இரமண்ராஜ்.


More information about the Ubuntu-tam mailing list