[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 13 பதிகை

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Fri Dec 29 00:23:16 GMT 2006


தமிழ் வெர்சுவல் யூனிவர்சிட்டி அகராதியிலிருந்தே எடுத்து அனுப்புகிறேன்.
நாம் கையாளுவதில் மாறுதல்கள் இருக்கலாம்.
இருந்தாலும் ஏற்கெனவே உள்ளவற்றை மாற்றுவதில் எனக்கு தயக்கம் இருக்கிறது.

On 12/28/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
> புகுபதிவு என்பது எளிமையாக தோற்றமளிக்கிறதே?
>
> புகு பதிவு - Log in
> விடு பதிவு - Log out
>
> நேற்று தமிழாக்க குழுமத்திற்கு Log என்பதற்கு செயற் பதிவு என்று
> பரிந்துரைத்திருந்தேன். இது குறித்த தங்களின் கருத்து.

log என்கிற noun  க்கு இது சரியாக தோன்றுகிறது. logfile..

>
> பதிகை - பதிவு என்பதை  registration  என்பதற்கு இணையாகக் கொள்ளலாம் அல்லவா?
>
> உ.ம்: உபுண்டு தமிழ் குழும இணைய தளத்தில் பதிவு செய்யவும் - Register at
> the Ubuntu Tamil Team's Website.

உண்மைதான். ஒரே மாதிரியான சொற்களை வித்தியாசமாக கையாள வழி வகுக்க வேண்டும்.

>
> சரி இவ்வாக்கியத்தினை  தமிழாக்குங்கள்:
>
> After Logging into the system, Choose Application --> Accesories -->
> Terminal
>
> இங்கே  "இணைய தளத்தினுள் நுழைந்தவுடன் "செயலிகள்--> உபகரணங்கள் -->
> முனையம்" தேர்வு செய்யவும்"  என்பது பொருத்தமாகத் தோன்றுகிறதே!

என்னை பொருத்தவரை பயனளிகளுக்கு அந்த அந்த சமய்த்தில் புரியும் படி
எழுதவேண்டும். அவ்வளவே. இடத்தை பொருத்து அர்த்தம் மாறுபடும்.
system  என்பது எப்படி அமைப்பு என்றும் சில சமயம் கணினியை குறிப்பதாயும்
இருக்கிறதோ அப்படி.

>
> மேலும்,
>
> The details of user's activities are monitored and logged into the log
> file.
>
> பயனரின் செயல்கள்  கண்காணிக்கப் படுவதோடு அவை  செயற் பதிவுக் கோப்பில்
> பதியப் படுகின்றன.
>
> தங்களின் கருத்துக்கள்??

மேலே உள்ளன!

திவே


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list