[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 13 பதிகை

amachu shriramadhas at gmail.com
Thu Dec 28 17:18:35 GMT 2006


புகுபதிவு என்பது எளிமையாக தோற்றமளிக்கிறதே? 

புகு பதிவு - Log in 
விடு பதிவு - Log out

நேற்று தமிழாக்க குழுமத்திற்கு Log என்பதற்கு செயற் பதிவு என்று
பரிந்துரைத்திருந்தேன். இது குறித்த தங்களின் கருத்து.

பதிகை - பதிவு என்பதை  registration  என்பதற்கு இணையாகக் கொள்ளலாம் அல்லவா?

உ.ம்: உபுண்டு தமிழ் குழும இணைய தளத்தில் பதிவு செய்யவும் - Register at
the Ubuntu Tamil Team's Website.

சரி இவ்வாக்கியத்தினை  தமிழாக்குங்கள்:

After Logging into the system, Choose Application --> Accesories -->
Terminal

இங்கே  "இணைய தளத்தினுள் நுழைந்தவுடன் "செயலிகள்--> உபகரணங்கள் -->
முனையம்" தேர்வு செய்யவும்"  என்பது பொருத்தமாகத் தோன்றுகிறதே!

மேலும்,

The details of user's activities are monitored and logged into the log
file.

பயனரின் செயல்கள்  கண்காணிக்கப் படுவதோடு அவை  செயற் பதிவுக் கோப்பில்
பதியப் படுகின்றன.

தங்களின் கருத்துக்கள்??


On Thu, 2006-12-28 at 18:51 +0530, Tirumurti Vasudevan wrote:
> பதிகை		Log
> 
> புகுபதிகை  	Login
> 
> புகுபதிகைப் பெயர்	Log- in name
> 
> புகுபதிகைக் ஆணைத்திரன்	login script
> 
> புகுபதிகைக் கோப்பு	Login security
> 
> விடுபதிகை	Log off
> 
> 
> -- 
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
More information about the Ubuntu-tam mailing list