[உபுண்டு தமிழகம்]சுழியில் உபுண்டு கையேடு...

amachu shriramadhas at gmail.com
Tue Dec 5 02:25:21 GMT 2006


வணக்கம்,

நாம் உருவாக்கும் கலைச்சொற்களின் பலன் முழுமையாக கிட்ட வேண்டுமாயின் அவை
புழக்கத்திலிருக்க வேண்டியது அவசியமாகிறது. 

மேலும் செயலிகளின் இடைமுகப்பை  தமிழாக்கம்  செய்தால் மட்டும் போதாது
அவற்றின் உதவிப் பக்கங்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

ஆக ஒரு புறம் இச்செயலானது மக்களிடையே  நாம் தமிழாக்கத்திற்கு பயன்படுத்தும்
கலைச்சொற்களை கொண்டுசேர்க்கிறது. மறுபுறம் தொழில் நுட்ப விஷயங்களை  தமிழில்
எழுதுவதற்கு நல்ல பயிற்சியும் கிடைக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு சுழி எனும் முயற்சி துவக்கப் பட்டது. இங்கே
தொழில்நுட்ப விஷயங்களை நாம் தமிழில் எழுத ஒரு வாய்ப்பு கிட்டுகிறது.

இதன் படி Ubuntu Desktop Guide எனும் நூலைத் தழுவி தற்சமயம் உபுண்டு கையேடு
எழுதிவருகிறேன்.

சமயம் கிடைக்கும் போது இதனை மறுஆய்வு செய்து குறிப்புகளை  அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

http://www.nrcfosshelpline.in/Suzhi/
-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-tam mailing list