வணக்கம்,

நமது இணைய தளம் (http://ubuntu-tam.org) ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தி வரும் மென்பொருள் துருபல். மேலும் விகி (http://ubuntu-tam.org/wiki/index.php) தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் மென்பொருள் மீடியாவிகி.

துருபல் அசோசியேஷன் (http://association.drupal.org/) மற்றும் விகிமீடியா பவுண்டேன் (http://wikimediafoundation.org) ஆகிய இரண்டிற்கும் தலா பத்து அமேரிக்க டாலர்களை உபுண்டு தமிழ் குழுமம் தம்மாலான சிறு நன்கொடையாக வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்து வந்த இவ்விரண்டாண்டு காலத்தில் நமது சிறு தேவைகளுக்காக அவ்வப் போது நிதியளித்து உதவியோருக்கும் வட்டுக்களை விலை தந்து வாங்கியோருக்கும் இத்தருணத்தில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆமாச்சு