1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.

2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.

3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.

4. ஒரு மடலுக்கு அடியே பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

உ.ம்:

> தமிழாக்கத்திற்கு எந்த செயலியினைப் பயன்படுத்தலாம்?

பி.ஓ.எடிட்

5. ஹச்.டி.எம்.எல் மடல்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

6. தமிழாக்கம் செய்யப் படும் பி.ஓ கோப்புகள் தவிர ஏனைய பிற இணைப்புகளை

அனுப்புவதைத் தவிர்க்கவும்.

பரிந்துரைக்கப் படும் நெறி: திரைக் காட்சிகள் போன்றவற்றை flickr போன்ற இணைய
தளங்களின் உதவி கொண்டு பதிவேற்றி அதன் முகவரியினை மடலில் பயன்படுத்தலாம்.

7.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத

விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும் அல்லது ஜிமேன்
வசதிகளைப் பயன்படுத்தவும்.
முகவரி -> http://blog.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!