தொடர்ச்சி...

1960  களில் உட்குழு பூசல்களுக்கு சில அடிப்படைவாதக் குழுக்கள் புகழ்
பெற்றிருந்தன.  திட்டமிட்டபடி செயல்படுத்துவதில் இருந்த  முரண்பாடுகள்
காரணமாக சில ஸ்தாபனங்கள் உடைந்தன. ஒருமித்த தார்மீகங்களையும்
லட்சியங்களையும் கொண்ட சோதர அமைப்புகளும் கூட தங்களுக்குள் பகைமை
பாராட்டிக் கொண்டன. இடது அணிகளை  குறைகூறுவதற்கு இவற்றைப்  பயன்படுத்தி
இதனை அதிகம் வளர்த்தது வலது அணிகள் தான்.

இவற்றோடு ஒப்பிட்டு சிலர் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினை  மட்டம் தட்ட
முயற்சி செய்கிறார்கள். திறந்த மென்பொருளாளர்களின் முரண்பாடுகளை  இவர்கள்
அந்த அடிப்படைவாதக் குழுக்களோடு ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பின்னோக்கி
செல்கிறார்கள். நாம் திறந்த மூல ஆதரவாளர்களோடு அடிப்படை தார்மீகங்களிலும்
லட்சியங்களிலும் மாறுபடுகின்றோம். ஆனால் அவர்களுடைய எண்ணங்களும்
நம்முடையதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டற்ற மென்பொருள் உருவாக்கம்
போன்ற  ஒரே  நடைமுறை  சாத்தியக் கூறுகளுக்கே இட்டுச் செல்கின்றன.

இதன் விளைவு,  மென்பொருள் உருவாக்கம் போன்ற பொதுவானத் திட்டங்களில்
கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினரும் திறந்த மூல மென்பொருள் இயக்கத்தினரும்
ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். இங்ஙனம் வெவ்வேறு தார்மீகங்களை  கொண்டு
விளங்குகிற குழுக்கள் பலரதரப்பட்ட மக்களுக்கும் ஊக்கமளித்து ஒரேவிதமான
திட்டங்களில் பங்கேற்பது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனாலும் அணுகுமுறைகள்
வேறுபட்டு  விளங்குவதால் சில சந்தர்ப்பங்களில் முற்றிலும் மாறுபட்ட
செயற்பாடுகளுக்கு இவை இட்டுச் செல்கின்றன.

மென்பொருள்களின் மூல நிரல்களை  மாற்றி  விநியோகிக்கக் கூடிய உரிமையை
பயனர்களுக்கு தருவதின் மூலம் மென்பொருளினை  வலுவுடையதாகவும்
நம்பகத்தன்மையுடையதாகவும் ஆக்குவதே திறந்த முலத்தின் அடிப்படை  சிந்தனை.
தனியுரிம பென்பொருட்களை  உருவாக்குபவர்கள் என்ன திறமை குறைந்தவர்களா!  சில
சந்தர்பங்களில் வலிமையும் நம்பகத்தன்மையும் வாய்ந்த மென்பொருட்களை
அவர்களும் உருவாக்குகிறார்கள்.  ஆனால் அவை  பயனர்களின் சுதந்திரத்திற்கு
மதிப்பளிப்பது இல்லை. இதனை  கட்டற்ற மென்பொருளாளர்களும் திறந்த மூல
மென்பொருளாளர்களும் எங்ஙனம் எதிர்கொள்வது?

தொடரும்...

அன்புடன்,
ஆமாச்சு.
http://aamachu.blogspot.com

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா