<html><head><style type="text/css"><!-- DIV {margin:0px;} --></style></head><body><div style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt">நம் மகிழ்ச்சிக்காகவும் ஒரு அடையாளத்துக்காகவும் தான் இப்படி சின்னம் வரைகிறோம். இந்த நடைமுறை மற்ற அனைத்து நாட்டு உபுண்டு குழுக்களிலும் வழக்கில் உள்ளது தான். எனக்குத் தெரிந்து, தமிழ் உபுண்டு மட்டும் தான் மொழி அடிப்படையிலான குழு. இது எனக்கு மிகவும் பெருமிதம் தரும் செய்தி. மற்ற அனைத்தும் பெரும்பான்மை நாடு
 சார் குழுக்கள் தான். நாட்டு சார் குழுக்களுக்கு நாட்டுக் கொடியின் வண்ணத்தை உபுண்டு மனித வளைய சின்னத்தில் இட்டு விடுகிறார்கள். தமிழுக்கென்று அப்படி வண்ணமோ குறியோ இல்லாததால் தான் இந்தக் குழப்பம்.<br><br>தமிழ் உபுண்டுக்கென்று சின்னம் இருப்பது நல்லது தான். அதிகாரப்பூர்வத் தமிழ்த் தளம், விக்கி உதவித் தளம், தமிழ் உபுண்டு இடைமுகப்பு, தமிழ் உபுண்டு விளம்பரப் பிரசுரங்கள்
 ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இது நம் உபுண்டு என்று தமிழ் மக்களை அடையாளப்படுத்திக் கொள்ள உதவும். ஆனால், அவசரம் அவசரமாக இப்படி சர்ச்சைக்குரிய தமிழ் உபுண்டுச் சின்னத்தை வரையத் தேவையில்லை. அதற்குப் பதில் உலகளாவிய உபுண்டு சின்னத்தையே தற்காலிகமாக நாமும் பயன்படுத்தலாம். இதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது.<br><br>என் கண்ணுக்கு மட்டும் தான் இப்படி சின்னம்
 பிரச்சினை பண்ணுகிறதோ என்று என் நண்பர்கள் பலரையும் கருத்து கேட்டேன்.I didn't give them any hint about the controversy here. Just asked them what the felt about the logo. உபுண்டு குறித்து அறியாதவர்கள், இந்தச் சின்னத்தில் எதற்குப் பிள்ளையார் சுழி என்று தான் முதலில் கேட்டார்கள். உபுண்டு, திறவூற்று மென்பொருள் குறித்து அறிந்தவர்கள் ஒரு கூட்டுழைப்புத் திட்டத்தில் இது போன்ற சின்னங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.
 பிறப்பாலும், சிந்தனையாலும் எனக்கே இது உறுத்துகிறது என்றால், இந்து அல்லாத பிறர் இதை எப்படி நோக்குவர் என்பது கவலைக்குறியது. தற்போது, இந்தக் குழுவில் இருவர், மூவர் தானே இதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்று எண்ணாமல், பிரச்சினையின் ஆழத்தை உணர வேண்டுகிறேன். இது போன்ற குறுகிய அடையாளப்படுத்தல்கள் எந்த வித்த்திலும் நம் குழுவினருக்கு மதிப்பைத் தேடித்தராது.
 <br><br>ரவி<br></div><br></body></html>