<html><head><style type="text/css"><!-- DIV {margin:0px;} --></style></head><body><div style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt">தற்பொழுது என் உபுண்டு இயங்கு தளத்தில் இருந்து ஓபன் ஆபிசு, கெயிம் உள்ளிட்ட அனைத்து செயலிகளிலும் தமிழ்நெட்99 விசைப்பலகை முறையில் எழுத முடிகிறது. (விண்டோசில் கெயிம், யாகூ மெசன்ஜர் ஆகியவற்றில் எ-கலப்பை இயங்க மறுக்கிறது. முகுந்த கவனிக்கலாம். ஆனால், இது எ-கலப்பை பிரச்சினையாக இருக்க வாய்ப்பில்லை என்று
 நினைக்கிறேன். அந்தந்த செயலிகளின் பிரச்சினையாக இருக்கலாம்.) <br><br>இந்த விதயத்தில் மயூரன் பெரிதும் உதவினார். அவரின் அணுகுமுறையின்படி எந்த ஒரு விசைப்பலகை முறையையும் நிறுவிப் பயன்படுத்தலாம் போல் உள்ளது. அனேகமாக, இது குறித்த குறிப்புகளை அவர் விரைவில் தருவார் என்று நினைக்கிறேன்.<br><br>லினக்சு இலவசம், திறம் வாய்ந்தது என்பதை தாண்டி, நாம் நினைத்ததை மற்றவரின் உதவியோடு நாமே
 செய்து கொள்ளலாம் என்ற உணர்வு தரும் இன்பத்துக்காகவே உபுண்டுவைத் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். என் புண்ணியத்தில் இன்னும் சிலரும் பயன்படுத்த தொடங்கி இருககிறார்கள்.<br><br>தவித்த வாய்க்குத் தண்ணீரை கூட காசு வாஙகிக் கொண்டு தரும் உலகத்தில், உபுண்டு தத்துவம் நம் மரபு சார் வாழ்க்கை முறைக்கு ஒத்திருப்பது கண்டு மகிழ்கிறேன். சரி, என் feelingsஐ இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
 :)<br><br>ரவி<br><br><br></div><br></body></html>