வாசுதேவன், ராமதாஸ்,

உபுண்டு மொழிபெயர்ப்புக்கு நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக எனக்கு பல சந்தேகங்கள் உள்ளன.
என் சந்தேகஙளை தெளிவுபடுத்துவதோடு இதுதொடர்பான உதவி ஆவணமொன்றினை தமிழில் தயாரித்து தருஈர்கள் எனவும் எதிர்பார்க்கிறேன்.

1.

ஒவ்வொரு திறந்த ஆணைமூல மென்பொருளும் தனக்கென தனியான வலைமனைகளை கொண்டிருக்கின்றது.
அவற்றுக்கான மொழிபெயர்ப்பு வேலைகளும் அங்கேயே இடம்பெறுகின்றன. அல்லது sourceforge போன்ற தளங்களில் பரவலாக இடம்பெறுகின்றன.

GNOME இனை எடுத்துக்கொண்டால் அதற்கான மொழிபெயர்ப்பு வெவ்வேறு இடங்களில் இடம்பெறுகிறது.

நாம் உபுண்டுவோடு தொடர்புடைய launchpad தளத்தில் செய்கிறோம்.

இந்த மொழிபெயர்ப்பெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டதுதானா?

அதாவது ஜெயராதா முதலியோர் செய்யும் மொழிபெயர்ப்பு வேலைகளில் இங்கே நாம் செய்கின்ற வேலைகள் இடையூறு விளைவிக்குமா? மீளச்செய்யப்படும் அபாயம் உள்ளதா?

ஒவ்வொரு மென்பொருளுக்கும் தனித்தனியே நடைபெறும் மொழிபெயர்ப்புகள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டதேயாயின் எவ்வாறு என விளக்குங்கள்.

2.

ஒருமுறை நான் debian -installer இல் மொழிபெயர்க்கப்படாத பகுதிகளை தெரிவுசெய்து மொழிபெயர்த்தபோது, அதனை ஏற்கனவே ஒருவர் பொறுப்பெடுத்திருப்பதாகவும், அந்த வேளையில் நான் செய்யும் பணி இடையூறு விளைவிக்கக்கூடியது எனவும் கருத்துக்கள் எழுந்தன.

இது எவ்வாறு சாத்தியம்?

நான் launchpad இற்கு போய், மென்பொருளை தெரிவுசெய்து முதலில் untranslated எனும் filter இனை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்படாத சொற்களை பெறுகிறேன். அதன் பின்னே அந்த தளத்தில் வைத்தே online இல் மொழிபெயர்க்கிறேன். அப்படி இருக்க அது எப்படி இடையூறாகும்?

ஒருவேளை நான் இந்த குழுவில் அங்கத்துவராக இல்லாமலிருந்தால் கூட என்னால் மொழிபெயர்ப்புக்களை செய்யமுடியும். ஏனெனில் அனைத்தும் திறந்த மூல திட்டங்கள். எவரும் எந்த நேரத்திலும் எதற்கும் பங்களிப்பு செய்யமுடியும். அப்படி இருக்க "இடையூறு விளைவித்தல்" எப்படி ஏற்பட்டது?

3.

சிலர் .po கோப்புக்களை தரவிறக்கி கணினியில் வைத்து மொழிபெயர்த்து பிறகு தரவேற்றுவதாக உணர்கிறேன்.
இந்த விடயம் மீளச்செய்தலுக்கு வழிவகுக்கிறது. இதனை கையாள்வதற்கான வழிமுறைகள் என்ன?

4.

தமிழ் இடைமுகப்பு பொதியில் சேர்ப்பதற்கென இறுதிப்படுத்தப்பட்ட சொற்கள் எவை என எப்படி தெரிந்துகொள்வது?
நான் செய்த பல மொழிபெயர்ப்புகள் மாற்றப்பட்டிருப்பதை காண்கிறேன்.

5.

உபுண்டுவுக்கென GNOME பொதி ஒன்றை நான் மொழிபெயர்த்தால் உண்மையில் உபுண்டுவுக்காக மொழிபெயர்க்கிறேனா? அல்லது GNOME இற்காக மொழிபெயர்க்கிறேன?

பதிலை எதிர்பார்க்கிறேன்

தோழமையுடன்
மு.மயூரன்

visit my blogs

http://www.mauran.blogspot.com

http://www.tamilgnu.blogspot.com