<html><head><style type="text/css"><!-- DIV {margin:0px;} --></style></head><body><div style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt">தமிழ் உபுண்டு பயனர்களுக்கு தரப்பட வேண்டிய முக்கியமான விக்கி உதவிக் குறிப்புகள்:<br><br>1. உபுண்டு நிறுவல் பொதியை எந்த முகவரியில் இருந்து இறக்குவது? எப்படி ISO imageஐ குறுந்தட்டில் எழுதி நிகழ்வட்டு (live cd) தயாரிப்பது?<br>2. எப்படி disk partition செய்வது? உபுண்டு நிறுவிய பின் எப்படி விண்டோஸ் partitionகளை அணுகுவது?<br>3. எப்படி எழுத்துருக்களை
 நிறுவிக்கொள்வது? பரிந்துரைக்கப்படும் தமிழ் எழுத்துரு சோடிகள் யாவை?<br>4. எப்படி மென்பொருள்களை நிறுவிக்கொள்வது?<br>5. உலாவி மற்றும் உரை பதிப்பானில் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை எப்படி சரியாகக் காண்பது, தட்டச்சு செய்வது? நிறுவிக்கொள்ள வேண்டிய தமிழ்ப்பொதிகள் யாவை? தமிழ் இடைமுகப்பை எப்படி காண்பது?<br>6. விண்டோஸ் மென்பொருள்களுக்கு இணையான உபுண்டு மென்பொருள் தேர்வுகள்
 யாவை?<br>7. IEல் மட்டும் இயங்கக்கூடிய தளங்களை எப்படி பார்வையிடுவது?<br>8. முனையம் (terminal) என்றால் என்ன? அதை எப்படி அணுகுவது? அதில் இருந்து செயற்படுத்தக்கூடிய அடிப்படையான தெரிந்து கொள்ள வேண்டிய கட்டளைகள் யாவை? <br>9. Desktop tips and tricks<br>10. இணையத்தில் உள்ள பிற உபுண்டு தமிழ் மடலாடற் குழுக்கள், குழுமங்கள், வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் பட்டியல்.<br><br>மேற்கண்ட தகவல்களை ஆங்கிலம் நன்கு தெரிந்தும்
 லினக்ஸ் பயன்பாட்டில் ஆர்வம் இருந்தும் தட்டுத் தடுமாறி பல தளங்களைப் படித்து, மயூரன் போன்றோரை பல முறை கேட்டு. பல இணையக் குழுமங்களில் துழாவி தான் அறிந்து கொள்ள முடிந்தது. உபுண்டு, லினக்ஸ் மீது ஆர்வம் கொண்டு வரும் தமிழ் மட்டும் அறிந்தோரும் இவற்றை அறிந்து கொள்ளும் வகையில் உபுண்டு தமிழ் விக்கி தளத்தில் தமிழிலேயே உதவிக்குறிப்புகள் தந்தால் நன்றாக இருக்கும். ஒரு
 புதுப்பயனர் மனதில் முதலில் எழும் கேள்விகளாக இவை தான் இருக்கும். இது தொடர்பான சில குறிப்புகள் ஏற்கனவே இருப்பதை அறிவேன். அவற்றை இன்னும் விரிவாகத் தரலாம்.<br><br>தமிழ் உபுண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கான விக்கி கையேட்டுக்கான விக்கி உதவிக் குறிப்புகள்:<br><br>1. இம்மடலாடற் குழுவுக்கான வழிகாட்டல். இந்த மடலாடற் குழு ஒன்று இருக்கிறது என்பதை கண்டுகொள்ளவே எனக்கு நாள் பிடித்தது.
 மொழிபெயர்ப்பாளர்கள் குழுமத்தில் இணையும்போதே இம்மடலாடற்குழு குறித்த தெரியப்படுத்தலாம். <br>2. இது வரை என்னென்ன மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? என்னென்ன சரி பார்க்கப்பட வேண்டும்? எப்படி சரி பார்க்கப்பட வேண்டும்? தமிழ் மொழிபெயர்ப்புக் குழுவுக்கான கொள்கைகள், அடிப்படை செயல்முறைகள் யாவை? இன்னும் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை யாவை? அக்கோப்புகளை எங்கிருந்து பெறுவது?
 தமிழாக்கிய பின் யாருக்கு அனுப்பி வைப்பது? மொழிபெயர்ப்பில் உதவும் சொற்ப்பட்டியல்கள் யாவை? எங்கிருந்து பெறுவது?<br>3. இது வரை மென்பொருள் மொழிபெயர்ப்பில் ஈடுபடாத தொடக்க நிலை பயனர்களுக்கான வழிகாட்டல்கள். எடுத்துக்காட்டுக்கு, po கோப்பு என்றால் என்ன? அதை எங்கிருந்து பெறுவது? அதன் பயன் என்ன?<br><br>இது போன்ற குறிப்புகளை, ஆங்கிலத்தில் கூட தந்தால் பரவாயில்லை. பழைய மடல்களை
 ஒவ்வொன்றாகப்படித்து நினைவு வைத்துக் கொள்வது, புரிந்து கொள்வது குழுமம் வளர வளர சற்று சிரம்மாக இருக்கும். குழு வளர வளர வரும் பயனுள்ள தகவல்களை ஓரிடத்தில் வாசிக்க எளிதாய் குவித்து வைக்க வேண்டும். அக்டோபர் 12க்குள் இவற்றை செய்ய இயலாவிட்டாலும் அதற்குப் பிறகு அவகாசம் எடுத்து செய்தாலும் பல பங்களிப்பாளர்களையும் ஈர்க்க வசதியாக இருக்கும். விரிவான குறிப்புகளாய் இல்லாமல்
 தொடர்புடைய ஆங்கில வழிகாட்டல் பக்கங்களுக்கான இணைப்புகளாக இருந்தால் கூட பரவாயில்லை<br><br>மற்றபடி விசைப்பலகை பிரச்சினையை என்னால் இயன்ற வரை தெளிவாக சொல்லி இருப்பதாக நம்புகிறேன். சீக்கிரம், யாராவது தீர்வு கண்டு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் :)<br><br>நன்றி,<br>ரவி<br><br><br><br></div><br></body></html>